மகாராஷ்டிர சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய
கூட்டத்தின்போது, மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ. வரிஸ் பதானைப் பார்த்து ‘பாரத
மாதாவுக்கு ஜே’ என சொல்லும்படி பா.ஜ.க. உறுப்பினர் ராம் காதம் கூறினார்.
அவர் சொல்ல மறுத்ததால் அவரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யும்படி பிற
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த பிரச்சனை காரணமாக
சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அடுத்தடுத்து மூன்று முறை சபை
ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து வரிஸ் பதானை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யும்
தீர்மானத்தை அமைச்சர் ரனித் பாட்டீல் முன்மொழிந்தார். இதற்கு சபை ஒப்புதல்
அளித்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே, இந்த கூட்டத்தொடர்
முழுவதும் அவர் சட்டசபைக்கு வர முடியாது.
கடந்த சில தினங்களுக்கு முன் மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவாய்சி, தனது கழுத்தில் கத்தியை வைத்து கேட்டாலும், பாரத மாதாவுக்கு ஜே என சொல்ல மாட்டேன் என்று கூறியது குறிப்பிடத்தக்க வெப்துனியா.com
கடந்த சில தினங்களுக்கு முன் மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவாய்சி, தனது கழுத்தில் கத்தியை வைத்து கேட்டாலும், பாரத மாதாவுக்கு ஜே என சொல்ல மாட்டேன் என்று கூறியது குறிப்பிடத்தக்க வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக