வியாழன், 17 மார்ச், 2016

டோனால்ட் டிரம்ப் :வெளிநாட்டவர்களை அமெரிக்காவிற்கு நுழைய விடக்கூடாது..NRIக்களின் வயிற்றில் புளி....

வாஷிங்டன் - வெளிநாட்டவர்களை அமெரிக்காக்குள் நுழைய விடக்குடாது என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த் டோனால்ட் டிரம்ப் பேட்டியளித்துள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் முன்னணியில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் குடியேறி வசிக்கும் பிற நாட்டவர்கள் மீது தொடர்ந்து விஷத்தைக் கக்கி வருகிறார் டிரம்ப். சமீபத்தில் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்கிடமான கருத்தை வெளியிட்டிருந்தார்.
வெளிநாட்டு முஸ்லீம்கள் அமெரிக்காவில் குடியேற விடக் கூடாது. . இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பிற நாட்டவர்களை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிட்டுப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.
யங்ஸ்டவுன் விமான நிலையத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஏஎல் வில்சன் எழுதிய தி ஸ்னேக் என்ற நூலிலிருந்து சில வரிகளைப் படித்தார். அந்தக் கதையில், உடம்புக்கு முடியாமல் போன பாம்பு ஒன்றை ஒரு பெண் தனது வீட்டுக்குக் கொண்டு சென்று வளர்க்கிறாராம். ஆனால் குணமடைந்ததும் அந்தப் பாம்பு அப்பெண்ணையேக் கடித்து விட்டதாம்.
இந்தக் கதையைக கூறிய டிரம்ப், எனவே நமது வீட்டுக்குள் (அமெரிக்காவுக்குள்) யாரை விடுவது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். வெளிநாட்டினர் நமது நாட்டுக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுவர் எழுப்புவேன். இதன் மூலம் மத்திய அமெரிக்கர்கள் உள்ளேவர முடியாது. அதேபோல சிரியாவிலும் ஒரு சுவர் எழுப்பப்படும். அதன் மூலம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றார் டிரம்ப்.  thinaboomi.com/

கருத்துகள் இல்லை: