திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியும், சங்கருடன் சேர்ந்து வாழவே கவுசல்யா விரும்பினார். ஞாயிற்றுக்கிழமையன்று உடுமலைப் பேட்டைக்கு இருவரும் சென்றுள்ளனர். சங்கருக்கு வேலை கிடைத்த செய்தியை மகிழ்ச்சியோடு தனது பெற்றோரிடம் கூறினாராம் கவுசல்யா. இருவரும் சென்னைக்கு சென்று வசிக்கப் போவதாகவும் கூறினாராம். ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே கவுசல்யாவின் உறவினால் வெட்டுப்பட்டு உயிரிழந்துள்ளார் சங்கர். கடைவீதியில் இருந்து வெளியே வந்த இருவரையும் நோட்டமிட்ட மூவர், பொதுமக்கள் மத்தியிலேயே கத்தியாலும், அரிவாளாலும் வெட்டி சாய்த்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த போது அங்கு நின்று கொண்டிருந்த சிவப்பு நிற கார் ஒன்று மெதுவாக நகர்ந்து சென்றது. அந்த காருக்குள் இருந்தவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Honour killing in Udumalai: 4 suspects nabbed
கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பழனியை சேர்ந்த மணிகண்டன்,
மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது
தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்து தனி இடத்தில்
வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில் பிடிபட்ட மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன்
ஆகியோர் கவுசல்யாவின் தந்தைக்கு நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. விசாரணை
இவர்கள் கூறும்போது, கவுசல்யாவின் தந்தை தனது மகள் ஏமாற்றிவிட்டு காதல்
திருமணம் செய்துவிட்டாளே என்று புலம்பி வந்தார். இதனால் அவருக்கு உதவி
செய்யும் நோக்கில் கவுசல்யாவை அழைத்து வரச் சென்றோம். ஆனால் அவர் வர
மறுத்ததால் ஆத்திரமடைந்த நாங்கள் அவர்களை வெட்டினோம் என்று கூறியதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில் திருப்பூர் மாவட்ட எஸ்.பியோ கைதானவர்களின் பெயர்களை
தெரிவிக்க மறுத்துவிட்டார். முக்கிய குற்றவாளியை கைது செய்து விட்டதாகவும்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் போது அவர்களைப் பற்றிய தகவல்களை
தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
சங்கர் கொலையில் கவுசல்யாவின் பெற்றோர், சின்னசாமி, அன்னலட்சுமி மற்றும்
தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும், கொலையாளிகள்
மீது எஸ்.சி., எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும்
சங்கரின் உறவினர்கள் வலியுறுத்தி நேற்று கொமாரலிங்கத்தில் மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கிலேயே தற்போது 4
பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனரோ என்றும் சந்தேகம்
எழுந்துள்ளது.
இந்த கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்பே பழனியில் உள்ள கவுசல்யாவின் பெற்றோர்
வீடு பூட்டப்பட்டிருக்கிறது. திட்டமிட்டே இந்த கொலையை கவுசல்யாவின்
பெற்றோர் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய
கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று
சரணடைந்தார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோரை
காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த பாண்டித்துரைதான் சங்கர்
கவுசல்யாவை கொலை செய்வதற்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்தார் என்றும்
கூறப்படுகிறது.
Read more at:://tamil.oneindia.com/
Read more at:://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக