செவ்வாய், 15 மார்ச், 2016

செல்வகுமார்,மாதன்,மணிகண்டன்,ஜெகதீசன் கைது.....தலித் இளைஞர் சங்கர் கொலை வழக்கில்

In a major breakthrough, the Tiruppur police have arrested four persons in connection with the brutal murder of 21-year-old Sankar, a Dalit man in Udumalaipettai, who was hacked to death on Sunday. Selvakumar, Madhan, Manikandan and Jagadeesan are the names of the accused who have been Arrested திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை குடிமங்கலத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் உடுமலை பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இந்த காதல் தம்பதியை, பைக்கில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பலத்த காயம் அடைந்த சங்கரும், கவுசல்யாவும் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சங்கர் உயிரிழந்தார். தலையில் வெட்டுக்காயத்துடன் கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.


சம்பவ இடத்தில் பைக்கில் 3 பேர் அரிவாளுடன் தப்பிச்செல்லும் காட்சியை பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இளைஞர் கொள்ளப்பட்டது தொடர்பாக தலித் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் தகவல் தெரிவித்தார்.

இந்த நிலையில், இளைஞர் கொள்ளப்பட்டது தொடர்பாக பெண்ணின் தந்தை சின்னசாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று, திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி பகுதியில் பழனியைச்சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர் nakkheeran,in

கருத்துகள் இல்லை: