சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தேமுதிக தலைவர்
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நினைப்பது கட்சி தொண்டர்களை கடும் அதிருப்தி
அடைய வைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுகவும், பாஜகவும்
நடையாய் நடந்து ஓய்ந்துவிட்டன. தேமுதிக தலைவர் விஜயகாந்தோ தனித்துப்
போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டார். விஜயகாந்தின் இந்த முடிவு தேமுதிக
தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துது.
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி பற்றி பேசலாம்
என்று பிரேமலதா தெரிவித்தது பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
பிரேமலதா
தேர்தலில் தனியாக போட்டியிட வேண்டும் என்ற முடிவை விஜயகாந்த் அல்ல மாறாக
பிரேமலதா தான் எடுத்தார் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்
தங்கள் கூட்டணிக்கு வருமாறு பாஜக தலைவர்கள் பிரேமலதாவுடன் தொடர்ந்து
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்
டெல்லி தலைவர்கள்
பாஜகவை சேர்ந்த டெல்லி தலைவர்கள் பிரமேலதாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை
நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவருக்கும் பாஜக கூட்டணியில் சேரவே விருப்பம்
என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்த் தன்னை அழைக்கும் மக்கள் நலக் கூட்டணியை தங்கள் கூட்டணிக்கு
வருமாறு அழைத்துள்ளார். பாஜக வர உள்ள கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்
என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தெரிவித்துவிட்டார்கள்.
அந்த அம்மா தான்
தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தது பிரேமலதா தான். கட்சி
முடிவுகளை அவர் தான் எடுக்கிறார். பாஜகவுடன் நெருக்கமாக இருக்கும் அவர்
அந்த கூட்டணிக்கே செல்ல முடிவு செய்வார் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
பாஜக கூட்டணியில் தேமுதிக சேர்வதை தாங்கள் கொஞ்சமும் விரும்பவில்லை
என்கின்றனர் தொண்டர்கள்
Read more at:/tamil.oneindia.com
Read more at:/tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக