பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை இயக்கி வரும் ஜி.எம்.ஆர். நிறுவனத்துக்கு ரூ.8 கோடி தர வேண்டும். இதுதொடர்பாக, விஜய் மல்லையா மீது அந்நிறுவனம் தொடர்ந்த 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவற்றில், ரூ.50 லட்சத்துக்கு வழங்கப்பட்ட ‘செக்’, பணம் இல்லாமல் திரும்பி வந்தது தொடர்பான வழக்கும் அடங்கும். அந்த வழக்கு விசாரணை, ஐதராபாத்தில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
அந்த விசாரணைக்காக, கடந்த 10–ந் தேதி விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜராகி இருக்க வேண்டும்.
ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் மீதும், கிங்பிஷர் நிறுவனம் மீதும், அதன் உயர் அதிகாரி மீதும் ஜாமீனில் விட முடியாத பிடிவாரண்டை கோர்ட்டு பிறப்பித்துள்ளது.
அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 13–ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதற்குள், அந்த பிடிவாரண்டு நிறைவேற்றப்பட வேண்டும். இதுபற்றி விஜய் மல்லையாவின் வக்கீல் எச்.சுதாகர் ராவிடம் கேட்டபோது, ‘பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன்’ என்று கூறினார்.
பாரத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லைய்யா வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 9ஆம் தேதி நடைபெற்றது. விசாரணையின் போது, கடந்த 2-ம் தேதியே விஜய் மல்லையா வெளிநாடு சென்றுவிட்டதாக அட்டர்னி ஜெனரல் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக