வியாழன், 17 மார்ச், 2016

சாதி அடையாளம் என்பது.....மகளையும் மருமகனையும் கொல்லும் அளவுக்கு

தஞ்சாவூரில் சசிகலா குடும்பமும், அதன் உறவுக் கும்பலும்தான் கடந்த 30 வருடங்களில் கணக்கற்ற அளவுக்கு பணம் சேர்த்த கும்பல். இந்த கள்ளர் குடும்பம் சம்பாதித்ததால் என் ஒன்றுவிட்ட மாமா தலித் பெண் ஒருவரை மணந்துகொண்டார். இன்னொருவர் தான் வேலை பார்த்த இடத்தில் வன்னியர் பெண்ணை மனந்துகொண்டார். பெரிய சாதிவெறியர்கள் என நான் நினைத்த இரண்டு உறவுக்கார தாத்தாக்களும் மகனை விலக்கி வைத்ததைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. இப்போது ஒருவர் வீட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார். இன்னொருவர் விலக்கி வைக்கப்படுவது தொடர்கிறது, ஆனால், அவருடன் மறைமுகமாக பேச்சுவார்த்தை இருக்கிறது. அவருக்கான சொத்துக்கள் முறையாக தரப்பட்டது.

இவருக்கு அடுத்த தலைமுறை தகப்பன்கள் இவர்களைவிட கொஞ்சமாவது முன்னேறியிருக்க வேண்டும். ஆனால் இங்கோ அடுத்த தலைமுறை இன்னும் சீரழிகிறது. மகளையும் மறுமகனையும் வெட்டிக்கொல்லும் அளவுக்கு இவர்களுக்கு சாதி எந்த பெருமையைக் கொடுத்தது என்று தெரியவில்லை.
தஞ்சாவூரில் சசிகலா குடும்பமும், அதன் உறவுக் கும்பலும்தான் கடந்த 30 வருடங்களில் கணக்கற்ற அளவுக்கு பணம் சேர்த்த கும்பல். இந்த கள்ளர் குடும்பம் சம்பாதித்ததால் தஞ்சாவூர் கள்ளர்களுக்கு ஒரு மயிரளவுகூட பிரயோஜனம் இல்லை.
தஞ்சாவூர் கள்ளர்கள்தான் இன்றளவும் ‘சிவாஜி மன்றாயரே’, ‘பிரபு மன்றாயரே’ என போஸ்டர் ஒட்டுகிறார்கள். ஆனால் பிரபு தன் மகனுக்கு மணம் முடித்தது நாயுடு குடும்பத்தில்தான். யாரை தன் சாதி பெருமிதமான அடையாளமாகக் கருதுகிறார்களோ, அவர்கள் அந்த அடையாளத்தை மதிப்பதில்லை; அல்லது சக சாதிக்காரனை மதிப்பதில்லை.
ஆனால், பல இளைஞர்களுக்கு இந்த அறிவெல்லாம் இருப்பதில்லை. இப்போதுதான் அதிகம் முத்துராமலிங்கத்தின் உருவம் தஞ்சை சுற்றுவட்டாரத்தில் காணக்கிடைக்கிறது. நான் உட்பட சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட சிலரை நெருடல் இல்லாமல் ஏற்றுக்கொள்ள எனக்கு முந்தைய தலைமுறை பழக்கிக்கொண்ட பிறகு, சாதித்திமிரை திணிப்பதற்கான அடையாளமாக முத்துராமலிங்கம் பரப்பப்படுவதைக் கண்டு பெரிதும் அச்சமடைகிறேன். என அண்ணன் மகனும், மாமன் மகனும் தன் முகநூல் பக்கத்தில் சாதிப்பெயரோடு காட்சி தருகிறார்கள்.
இந்துத்துவாவின் ஊடுருவலுக்குப் பிறகு நாயாக இருந்த சாதியுணர்வு வெறிநாயாக மாறியிருக்கிறது. சாதாரண நாயை தானாக சாகட்டும் என விட்டுவிடலாம், வெறிநாயை கொல்வதே வழி. சாதியுணர்வை முற்றாக ஒழிக்க வேண்டிய வேளை இது. காதல் மணங்களை ஊக்குவிப்பதன் வாயிலாகவே சாதியை நிரந்தரமாக ஒழிக்க இயலும்.   ://heronewsonline.com/c
– வில்லவன் இராமதாஸ்

கருத்துகள் இல்லை: