தொழிலதிபர் விஜய் மல்லையா விவகாரம்
தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மல்லையாவுக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது. சுவாமியின் ஜனதா கட்சியில் 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை விஜய் மல்லையா தேசிய செயல் தலைவராக இருந்தார்.
ஆகையால், இந்த விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு மல்லையா தப்பிச் செல்லுவதற்கு சுப்பிரமணியன் சுவாமி உதவினாரா? இதற்கு பிரதமர் மோடி ஆதரவு அளித்தாரா? என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும் என்றார் பிரமோத் திவாரி.
கிங் ஃபிஷர் நிர்வாகியிடம் சிபிஐ விசாரணை: இதனிடையே, வங்கிகளிடம் இருந்து கிங் ஃபிஷர் நிறுவனம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத விவகாரம் தொடர்பாக கிங் ஃபிஷர் நிறுவனம், யூ.பி. குழும நிறுவனம் ஆகியவற்றின் முன்னாள் தலைமை நிதி அதிகாரிகளான ரகுநாதன், ரவி நெடுங்காடி ஆகியோரிடம் சிபிஐ செவ்வாய்க்கிழமை விசாரணை
நடத்தியது தினமணி.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக