சென்னை: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர்
கார்த்திக் இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திமுக கூட்டணியில்
இணைகிறார். அவருக்கு ஒரு சீட் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இதுவரை பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்ளும்படியான
கட்சிகளாக காங்கிரஸ், அகில இந்திய முஸ்லீம் லீக் ஆகியவை மட்டுமே. அதுதவிர
ஏகப்பட்ட சாதி, மத அமைப்புகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன. தினசரி
பல்வேறு அமைப்புகள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து
வருகின்றன.
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்திக் கட்சி திமுக கூட்டணியில்
இணைகிறது.
இதுதொடர்பாக இன்று திமுக தலைவர் கருணாநிதியை, கார்த்திக் சந்தித்துப் பேசவுள்ளார். கார்த்திக் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அதில் கார்த்திக் போட்டியிடுவார். அவர் தி்முக சின்னத்தின் கீழ் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமகா அம்பாசமுத்திரம், ஆலங்குளம் அல்லது தென்காசி ஆகியவற்றில் ஒரு தொகுதியில் கார்த்திக் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. dailythanthi.com

1 கருத்து:
நீங்க திமுக கூட கூட்டணி வெச்சா, என்ன ஒரு 10 சீட் கூட கிடைக்காது. அதுக்கு தனியா நின்னுட்டு போயிரலாம்.
மேலும் தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Latest Tamil News Online - ஐ சொடுக்கவும்.
கருத்துரையிடுக