வெள்ளி, 18 மார்ச், 2016

போலி என்கவுண்டரில் பலியான இஸ்ரத் ஜகான் மீது சேறு பூச முயற்சி?


குஜராத்தில் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட மும்பை இளம் பெண் இஸ்ரத் ஜகான், ‘தற்கொலைப்படை தீவிரவாதி’ என்று மும்பை கோர்ட்டில் டேவிட் ஹெட்லி நேற்று ஒரு திடீர் வாக்குமூலம் அளித்தார். இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஹெட்லியின் வாக்குமூலம் குறித்து இஸ்ரத் ஜகானின் சகோதரி முஸாரத் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது: இஸ்ரத் ஜகான் போலி என்கவுண்டரால் கொல்லப்பட்டது விசாரணையில் நிரூபணம் ஆனது. மேலும், அவர் ஓர் அப்பாவி என்பதை விசாரணை அதிகாரிகள் நிரூபித்துக் காட்டினர். தற்போது அவரை தற்கொலைப்படை தீவிரவாதி என்று கூறுவது, திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் சதி. இதில், பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களது பெயரை வெளியிட விரும்பவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக இதன் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹெட்லி இதனை சொல்கிறார். இஸ்ரத் ஜகான் ஓர் அப்பாவி என்பது நிரூபணம் ஆகியும், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு ஏன் காலதாமதம் ஆகிறது என்பது புரியவில்லை.

ஹெட்லி ஒரு தீவிரவாதி. அவர் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரது வாக்குமூலம் எப்படி கணக்கில் எடுத்து கொள்ளப்படும்? நாங்கள் கடந்த 11 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். ஹெட்லி கூறுவதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு முஸாரத் தெரிவித்தார்.
இஸ்ரத் ஜகானின் மாமா ரவூஃப் லாலா கூறுகையில், ‘‘ஹெட்லியின் வாக்குமூலத்தை வைத்து இஸ்ரத் ஜகானின் பெயரை தீவிரவாதிகளுடன் இணைப்பதற்கு சதி நடக்கிறது’’ என்று வருத்தம் தெரிவித்தார். இதேபோல், ஹெட்லியின் வாக்குமூலத்தை வைத்து தங்கள் மீது ஏற்பட்ட களங்கத்தை போக்கிக் கொள்ள சிலர் முயற்சித்து வருவதாக இஸ்ரத் ஜகானின் தாயார் ஷமீமா கவுசர் தெரிவித்தார்.
இதனிடையே, கோர்ட்டில் இஸ்ரத் ஜகானின் சார்பில் ஆஜரான வக்கீல் விரிந்தா குரோவர் கூறும்போது, ‘‘ஹெட்லியிடம் அரசுத் தரப்பு வக்கீல் உஜ்வால் நிகம் மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தொடர்பே இல்லாத கேள்விகளைக் கேட்டு, இதில் அரசியல் தொடர்பை ஏற்படுத்துகிறார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
- See more at: thoothuonline.com/a

1 கருத்து:

Unknown சொன்னது…

சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி.மேலும் தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளதினத்தந்திஐ சொடுக்கவும்.