செவ்வாய், 15 மார்ச், 2016

எந்த பதவிக்கும் ஆசைப்படாத மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அம்மையார்


திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் கட்சிக் கூட்டங்களில் பேசியும் தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடியும் தமிழுனர்வை ஊட்டினார்.அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். திருமதி மங்கையர்க்கரசி அவர்கள் ஒரு கூட்டத்திற்கு பேசவருகிறார் என்று அறிவித்தாலே போதும் மக்கள் கூட்டம் பெருந்திரளாகக் கூடிவிடும்.இப்பொழுது பலருக்கும் கடந்த முப்பது ஆண்டுகள் போரின் சரித்திரம் மட்டுமே சிறிது தெரியும். அதற்கு முன் தமிழர் இயக்கம் எவ்வாறு வளர்த்தெடுக்கப் பட்டது என்பது பலருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிப்பதுமில்லை.
திருமதி மங்கையர்க்கரசி அம்மையார் போன்றவர்கள் சிறுகக் சிறுக மூட்டிய தமிளுணர்வு தான் இன்றும் அணையாத தீபமாக தமிழர் மனங்களில் சுடர்விட்டுக் கொன்றிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஐம்பது அறுபதுகளில், பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்கிய காலத்தில் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணியை உருவாக்கி, அதற்குத் தலைமை தங்கி வழி நடாத்தினார்.தமிழரசுக் கட்சியின் கொள்கைகளின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட மங்கையார்கரசி அம்மையார் சகலரையும் சமமாக மதித்தார். மங்கையர்க்கரசி அம்மையாருக்கு இருந்த ஆங்கிலப் புலமையானது பல்வேறு தலைவர்களுடனும் தொடர்புகளைப் பேணுவதற்கு மிகவும் உதவியது.
மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியுடன் அவருக்குண்டான தனிப்பட்ட நட்பும் தொடர்பும் இந்திராகாந்தி அம்மையார் தமிழர் அரசியலில் அக்கறை கொள்ளச் செய்ததில் கணிசமான பங்கு வகித்தது என்பது பலரும் அறியாத்தொன்றாகும். மங்கையர்க்கரசி அம்மையார் அவர்கள் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப் பட்ட கறுப்புக் கொடிப் போராட்டம், சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், பாதயாத்திரை முதலான சகல நடவடிக்கைகளிலும் தீவிர பங்குகொண்டவர்Rajendranad-12
இரண்டு தடவை எதாவது கட்சி கூட்டத்திற்கு போனவுடனேயே பதவி கேட்டுச் சண்டையிடும் இன்றைய கால கட்டத்தில் அறுபது ஆண்டுகாலம் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாத மங்கயர்கரசி அம்மையாரின் பெருமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாகும் என முன்னாள் யாழ். மாவட்ட அபிவிருத்தி சபை தலைவர் ஆ.ந.இராசேந்திரன் மங்கயர்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவு குறித்து வெளியிட்ட அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
முன்நாள் யாழ்,மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் இராசேந்திரன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியின் முழு விபரம்……
தமிழர் தலைவர், இலங்கைப் பாராளுமன்றத்தின் முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர், தமிழரசுக் கட்சியின் மதிப்பார்ந்த தலைவர், தமிழர் விடுதலைக் கூ ட்டனியின் செயலாளர் நாயகம், தந்தை செல்வாவின் அரசியல் வாரிசு அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் மங்கை அக்காவென அன்பாக அழைக்கப்பட்ட திருமதி மங்கயர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் லண்டனில் காலமான செய்தி பேரதிர்ச்சியையும் பெரும் துயரையும் தந்தது.
திருமதி மங்கையர்க்கரசி அவர்கள் மூளாய்க் கிராமத்தில் வசதி படைத்த குடும்பத்தில் 1933 ஆம் ஆண்டு ஆடி மாதம் மூன்றாம் திகதி பிறந்தவர்.அவரது தந்தையார் வல்லிபுரம் அவர்கள் கட்டுவன், குரும்பசிட்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர். மூளாயில் நாகம்மா என்பவரைத் திருமணம் செய்து அங்கேயே குடியேறியவர்.இவர்களுக்கு பண்டாரவளையில் சிறப்பாக இயங்கிய வியாபாரத் தாபனம் ஒன்று இருந்தது.மங்கையர்க்கரசி அம்மையார் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வியையும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியிலும் பெற்றார்.
இயல்பாகவே இசைஞானம் கொண்டவராக இருந்தமையாலும் , குடும்பத்தில் வசதியிருந்தமையாலும் பெற்றோர் மகளை இசை பயில்வதற்காக மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் சேர்த்தார்கள். அங்கு முறையாக இசைப் பயிற்சியை மங்கையர்க்கரசி அவர்கள் பெற்றார். 1954 ஆம் ஆண்டு பிரபல அரசியல் வாதியும் வழக்கறிஞருமாகிய அமிர்தலிங்கம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். திரு.அமிர்தலிங்கம் அவர்கள் அடிக்கடி அரசியல் கூட்டங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டியேற்பட்டதால் தானும் அவருடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் கட்சிக் கூட்டங்களில் பேசியும் தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடியும் தமிழுனர்வை ஊட்டினார்.அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். திருமதி மங்கையர்க்கரசி அவர்கள் ஒரு கூட்டத்திற்கு பேசவருகிறார் என்று அறிவித்தாலே போதும் மக்கள் கூட்டம் பெருந்திரளாகக் கூடிவிடும்.இப்பொழுது பலருக்கும் கடந்த முப்பது ஆண்டுகள் போரின் சரித்திரம் மட்டுமே சிறிது தெரியும். அதற்கு முன் தமிழர் இயக்கம் எவ்வாறு வளர்த்தெடுக்கப் பட்டது என்பது பலருக்கும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிப்பதுமில்லை.
திருமதி மங்கையர்க்கரசி அம்மையார் போன்றவர்கள் சிறுகக் சிறுக மூட்டிய தமிளுணர்வு தான் இன்றும் அணையாத தீபமாக தமிழர் மனங்களில் சுடர்விட்டுக் கொன்றிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஐம்பது அறுபதுகளில், பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்கிய காலத்தில் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணியை உருவாக்கி, அதற்குத் தலைமை தங்கி வழி நடாத்தினார்.தமிழரசுக் கட்சியின் கொள்கைகளின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட மங்கையார்கரசி அம்மையார் சகலரையும் சமமாக மதித்தார். மங்கையர்க்கரசி அம்மையாருக்கு இருந்த ஆங்கிலப் புலமையானது பல்வேறு தலைவர்களுடனும் தொடர்புகளைப் பேணுவதற்கு மிகவும் உதவியது.
மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியுடன் அவருக்குண்டான தனிப்பட்ட நட்பும் தொடர்பும் இந்திராகாந்தி அம்மையார் தமிழர் அரசியலில் அக்கறை கொள்ளச் செய்ததில் கணிசமான பங்கு வகித்தது என்பது பலரும் அறியாத்தொன்றாகும். மங்கையர்க்கரசி அம்மையார் அவர்கள் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்கப் பட்ட கறுப்புக் கொடிப் போராட்டம், சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், பாதயாத்திரை முதலான சகல நடவடிக்கைகளிலும் தீவிர பங்குகொண்டவர்.
1961 ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் தினமும் பங்குபற்றி தொண்டர்களை தேசபத்திப் பாடல்களைப் பாடி உச்சாகப்படுத்தினார்.சத்தியாக்கிரகத்தை அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநயாகா அம்மையார் இராணுவத்தையும் காவலர்களையும் கொண்டு அடக்கிய பொது 74 தமிழரசுக் கட்சியினரைக் கைதுசெய்து பனாகொடை இராணுவ முகாமில் அடைத்தார். இன்று தொண்டர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள்.அன்று தலைவர் அமிர்தலிங்கமும் அவர்தம் பாரியார் மங்கையர்க்கரசி அம்மையாரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்கியிருந்தனர். முக்கியமான விடயம் அங்கு ஆறு மாதம் தடுத்து வைக்கப் பட்டவர்களில் மங்கையர்க்கரசி அம்மையார் மட்டுமே ஒரேயொரு பெண் மணியாகவிருந்தார் என்பதாகும்.
திருமதி மங்கையர்க்கரசி அவர்கள் சிறந்த பண்பாளர்.அவர் தம் இல்லத்திற்கு செல்வர்களை சிறந்த முறையில் குறை எதுவும் இல்லாது உபசரித்து அனுப்பும் நற்பண்பு கொண்டவர்.சகலருடனும் சகசமாக, ஏற்றம் தாழ்வு, சாதி வேற்றுமை கிஞ்சித்துமில்லாது பழகியவர்.அந்தப் பண்பானது தலைவர் அமிர்தலிங்கம் அவர்களுக்கு காங்கேசன்துறைத் தொகுதியில் மிகப் பெரிய செல்வாக்கை ஏற்படுத்தியது. திரு காசி ஆனந்தன் அவர்களின் திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டபோது பெண்ணைத் தமது வீட்டில் வைத்திருந்து பெண்ணுக்குத் தாய் தந்தையராக இருந்து திருமணம் செய்து வைத்த பெருமை திரு,திருமதி அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி அவர்களையே சாரும்.
1983 ஆம் ஆண்டு யூலை கலவரத்தின் பின் திரு அமிர்தலிங்கம் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றுவிட, திருமதி மங்கையர்க்கரசி அவர்கள் மூளாயிலுள்ள அவர் தம் இல்லத்தில் வசித்தார்கள்.1983 செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரின் விசேட தூதுவராக திரு.ஜி.பார்த்தசாரதி அவர்கள் இலங்கைக்கு வந்தார்.தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வெளிநாட்டுப் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற முதலாவது முன்னெடுப்பு இதுவாகும். திரு பார்த்தசாரதி அவர்களுடன் திரு.அமிர்தலிங்கம் அவர்களும் கொழுப்புக்கு வந்திருந்தார்.அந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்வதற்காக வடமாகாணத்தில் இருந்த தலைவர் மு.சிவசிதம்பரம்,வவுனியா பா.உ. சிவசிதம்பரம் திரு.ஆனந்தசங்கரி, திரு.ஆலாலசுந்தரம் ஆகியோருக்கு அழைப்பு வந்தது.திருமதி.மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தையும் திரு.அமிர்தலிங்கம் அவர்களுடன் சேர்ப்பதற்காக கொழும்புக்குக் கூட்டிச்செல்ல வேண்டியிருந்தது.அப்போது திரு.சிவசிதம்பரம் அவர்களின் வாகனம் கலவரத்தில் எரிக்கப்பட்டு விட்டது.ஆலாலசுந்தரத்தின் வாகனத்தைப் இயக்கம் பறித்தெடுத்து விட்டது. கலவரம் நடந்துகொண்டிருந்த நேரம் அது.வவுனியாவுக்கு வெளியே செல்லவதற்கு பயந்த காலமது.பலரும் வவுனியா வரை மட்டும் வாகன உதவி செய்வதாக கூறினார்கள்.
அப்போது யாழ்.மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவராக இருந்த என்னிடம் எனது உத்தியோக பூர்வ வாகனத்தை தரமுடியுமா என தலைவர் சிவசிதம்பரம் ஐயா அவர்கள் தொலைபேசியில் கேட்டார்.நான் உடனடியாகவே வாகனத்துடன் நானும் வருகிறேன் என்று கூறினேன்.அதன்படி தலைவர் சிவசிதம்பரம் அவர்களும் வவுனியா சிவசிதம்பரம் அவர்களும் ஆனந்தசங்கரி அவர்களும் ஒருவாகனத்திலும் எனது வாகனத்தில் நானும் திரு.ஆலாலசுந்தரம் அவர்களும் திருமதி.மங்கையர்க்கரசி அம்மையாரும் சென்றோம்.வவுனியா கடந்ததும் யாரும் அடையாளம் காணாது இருப்பதற்காக முஸ்லிம் பெண்மணி போல தலையில் முக்காடு இட்டு திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் வந்தார்கள்..ஒருவாறு எந்தப் பிரச்சனையும் இன்றி கொழும்புக்கு கூட்டிச் சென்று தலைவர் அமிர்தலிங்கம் அவர்களிடம் அவர் தம் துணைவியாரை ஒப்படைத்தோம்.
திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து தலைவருடன் பௌத்தாலோக மாவத்தையில் தங்கியிருந்தார்.அக்காலத்தில் நான் தலைவரின் செயலாளராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமைப்புச் செயலாளாரகவும் கடமையாற்றியதால் தினமும் அங்கு சென்று அவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.அக்கால கட்டத்தில் அன்னாரின் அன்பையும் அனுசரனையையும் உபசரிப்பையும் நேரில் அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இரண்டு தடவை எதாவது கட்சி கூட்டத்திற்கு போனவுடனேயே பதவி கேட்டுச் சண்டையிடும் இப்போதைய கூட்டத்தில் அறுபது ஆண்டுகாலம் எந்தப் பதவிக்கும் ஆசைப்படாத அம்மையாரின் பெருமை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாகும்.அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போமாக.
தினக்கதிர்.

கருத்துகள் இல்லை: