புதன், 16 மார்ச், 2016

பாகிஸ்தான் பேருந்தில் குண்டுவெடித்தது 16 பேர் பலி 30 பேர் படுகாயம் தலைமை செயலக ஊழியர்கள் பணயம்

dailythanthi.com :பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அரசு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து குண்டு வெடித்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்  கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மர்தான் பகுதியில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், பெஷாவரில் குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்சில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர்கள்16 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சம்பவம் குறித்து காவல்துறை மூத்த அதிகாரி முகமது காசிப் கூறும்போது,

 "பெஷாவர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களை பணிக்கு அழைத்துச் செல்லும் பேருந்து வழக்கம்போல் இன்றும் வந்துள்ளது. 40 முதல் 50 ஊழியர்கள் அந்த பேருந்தில் இருந்தனர். அப்போது திடீரென பேருந்துக்குள் வெடிகுண்டு வெடித்தது. இதில் 15 பேர் சம்பவம் இடத்திலேயே பலியாகினர்" என்றார்.

இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த குறித்து  நவாஸ் செரீப்  கூறியதாவது:

தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் விலை மதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம். இந்த கோழைத்தனமான தாக்குதல் எங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இருந்து உடைத்து விட முடியாது என்று கூறினார்.

பெஷாவர் பல்வேறு கொடூரமான தாக்குதல்களை சந்தித்து உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் அத்துமீறி புகுந்து 148 அப்பாவி குழந்தைகள் உட்ப்ட 151 பேரை சுட்டுகொன்றனர். இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கியது. இதனையடுத்து தீவிரவாதிகள் மீதான பிடியை சிலநாட்கள் இறுக்கிய பாகிஸ்தான், மீண்டும் தளர்த்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: