heronewsonline.com எதேச்சையாகத்தான் அந்த பேட்டியை
பார்க்க நேர்ந்தது. சேனல் மாற்றுகையில், சுட்டிவிகடன் தொலைக்காட்சியில்
அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார்.
“ரித்திகா சிங் பயங்கரமான பாக்ஸர், நீ
ரெண்டு ரவுண்ட்கூட தாக்குப் பிடிக்க மாட்டேனு சொன்னாங்க. அதேமாதிரி முதல்
ரவுண்டல ஒரு குத்துவிட்டா. தலைக்கு மேல பூச்சி பறந்திச்சி. ஏழு
எண்ணுறவரைக்கும் எனக்கு ஒண்ணுமே நினைவில்ல. அதற்கப்புறம் சுதாரிச்சு அதே
ரவுண்ட்ல அவளுக்கு ஒரு குத்துவிட்டேன். இப்போ அவளுக்கு கவுண்ட் பண்ண
ஆரம்பிச்சாங்க. அவளை நான் பலமுறை தோற்கடிச்சிருக்கேன்…” அந்தப் பெண் பேசப்
பேச ஆச்சரியம் அதிகமானது.
அந்த பெண்ணின் பெயர் துளசி ஹெலன்.
தமிழகத்தைச் சேர்ந்த பாக்ஸர். அவரது அக்கா சரஸ்வதி. போலீஸ் வேலையில்
சேருவதற்காக பாக்சிங் கற்றவர். அக்காவைப் பார்த்து தங்கைக்கு பாக்சிங்கில்
ஆர்வம் வந்திருக்கிறது. சின்ன வயதிலேயே பாக்சிங் கற்க
ஆரம்பித்திருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள்
வென்றுள்ளார் துளசி ஹெலன்.
‘இறுதிச்சுற்று’ படத்தின் இயக்குனர் சுதா,
அப்படத்தை தொடங்கும் முன் துளசி ஹெலனை சந்தித்து அவரிடம் பேசியுள்ளார்.
பாக்சிங் துறையில் உள்ள பாலியல் அத்துமீறல்கள், அதனை எதிர்த்ததால்
போட்டிகளில் விளையாட முடியாமல் போனது உள்பட அனைத்தையும் துளசி அவரிடம்
கூறியுள்ளார்.
‘இறுதிச்சுற்று’ படத்தில் வரும் அனைத்து
சம்பவங்களும் துளசி சொன்னவை, துளசியின் சொந்த வாழ்க்கையில் நடந்தவை.
துளசியின் தந்தை சமீபத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது வரை அனைத்தும்
துளசியின் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டவை.
சுதா நேர்மையானவராக இருந்திருந்தால்,
துளசியை தனது படத்தில் நடிக்க வைத்திருக்க வேண்டும். அதற்கு அவருக்கு
தடையாக இருந்தது, துளசியின் கறுப்பு நிறம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
‘இறுதிச்சுற்றி’ல் சென்னை குப்பத்தை சேர்ந்த நாயகி வெளுத்த நிறத்தில்
இருப்பதற்கு காரணமாக, அவளது அம்மா சேட்டு பெண் என்று காட்டியிருந்தார்.
துளசிக்குப் பதில், தமிழ் சினிமா நாயகிக்குரிய தோற்றத்தில் இருந்த இன்னொரு
பாக்ஸரான ரித்திகா சிங்கை சுதா நடிக்க வைத்தார். ரித்திகா சிங் துளசியிடம்
பலமுறை தோற்றவர் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ் சினிமா வணிக நிர்ப்பந்தங்களுக்கு
உள்பட்டு துளசிக்குப் பதில் ரித்திகா சிங்கை சுதா நடிக்க வைத்திருந்தாலும்,
முறைப்படி துளசியின் கதையை படமாக்க அவரிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும்.
அதை சுதா செய்யவில்லை. ஏன் தனது கதையை சுதா கேட்கிறார் என்பதுகூட துளசிக்கு
தெரிந்திருக்கவில்லை.
‘இறுதிச்சுற்று’ படம் வந்த பிறகே தனது
கதையை சுதா படமாக்கியிருப்பது துளசிக்கு தெரிய வந்துள்ளது. அதன்பிறகு
சுதாவை தொடர்பு கொண்டபோது, “நான் பலபேரை இந்தப் படத்துக்காக சந்தித்தேன்.
எல்லோரும் நீ சொல்வதைப் போன்ற கதையைத்தான் சொல்கிறார்கள்” என்று
பதிலளித்திருக்கிறார். இது அப்பட்டமான மோசடி பதில்.
துளிசியின் அக்கா சரஸ்வதியை சரஸ் என்று
கூப்பிடுவதைப் போலவே, படத்தில் வரும் லட்சுமியை லக்ஸ் என்று
அழைக்கிறார்கள். துளசி மீதான பொறாமையில் போட்டிக்கு முன்பு துளசியின் அக்கா
துளசியின் முகத்தில் குத்துவிட்டதைப் போன்று, படத்தின் நாயகியின் கையை
அவளது அக்காவே காயப்படுத்தும் காட்சி படத்தில் உள்ளது.
துளசியின் பேட்டியிலிருந்து, அவரது கதையே
‘இறுதிச்சுற்று’ படமாகியிருக்கிறது என்பது உறுதியாகிறது. அவரை நடிக்க
வைக்காதது ஒரு தவறு என்றால், அவரது அனுமதியே இல்லாமல் அவரது கதையை
படமாக்கியதுடன், அதனை படம் வெளிவந்த பிறகும் மறைத்தது இன்னொரு மோசடி.
‘இறுதிச்சுற்று’ படம் சுதாவுக்கும்,
ரித்திகா சிங்குக்கும் புதிய அடையாளத்தை தந்திருக்கிறது. இதே கதையை
தெலுங்கிலும் படமாக்கப் போகிறார் சுதா, நடிக்கப் போகிறார் ரித்திகா சிங்.
ஆனால், இந்த கதையின் நாயகியும், கதையின் சொந்தக்காரருமான துளசி ஹெலன்
இன்னும் துச்சமான சம்பளத்துக்கு ஜிம்மில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
– பாபுராஜ்
# # #
Thulasi Helan, a dalit woman boxer
As dawn breaks over Besant Nagar beach
every day, a wiry, lithe figure can be found working out on the sands.
Jogging, skipping, and shadow boxing, E Thulasi Helen is focused on her
fitness training. For the 29-year-old, who was among the top women
boxers in the country by the age of 24, is all set to make her debut in
the world of professional boxing on the international circuit.
“I want to start pro boxing by April or
May so I have to be in my best form,” says Thulasi, with determination.
It is this same grit that helped the young dalit girl to battle all odds
and make her own place in the ring. On January 10, she received World
Tamil Chamber of Commerce (WTCC) Achiever Award from Tamil Nadu governor
K Rosaiah.
Born in 1986 to V Ekanandan, a tailor,
and Mary, a homemaker, Thulasi was introduced to boxing at a young age.
“My older sister Saraswathi began taking boxing classes at the Nehru
Stadium when she was 14. It was a time when boxing was gaining
popularity, especially among our caste and class as it was a route to a
better life,” says Thulasi, adding that Muhammad Ali was her
inspiration. “One day, I went to watch my sister when she was
participating in a match. Though she lost, I felt she should have won
and aired my opinion. So one of the officials said that only if I joined
boxing and stepped into the ring, would I know what I was talking
about,” she recollects. She was only 12 then, but decided to sign up for
classes.
The same year she ran away from home
over a family dispute.Sometimes, she would stay with her grandparents,
at other times she would crash at a friend’s place, or seek shelter in a
hostel. Often, strapped for cash, she did odd jobs in petrol bunks and
pizza shops and slept on the beach or at railway stations. “Life was
tough, but whenever I stumbled, I told myself to get up and move on as I
had only myself to rely on,” says Thulasi. Having dropped out of school
after Class 8, she took her Class 10 exams privately, and then devoted
herself to pursuing a career in boxing. “I like boxing because, unlike
volleyball, or football, it is not a team sport but one in which the
individual’s skills are tested,” says Thulasi, now a fitness trainer and
boxing coach at Toneez Fitness Centre.
She won her first gold at the Indian
International Boxing Championship XXIII New Delhi YMCA in the 42kg-44kg
weight category. After that there was no looking back. “At 14, I was
selected by the Sports Authority of India for training and went to
Kollam in Kerala, for a year,” says Thulasi, who had fought her way to
the top spot in the country and even defeated Olympian Mary Kom. “Her
strength lies in the way she delivers body punches and her weakness is
that she leaves an open guard,” says Thulasi of Mary. However, by 2011,
financial constraints and a dispute with the state boxing association
forced her to leave the state team. Her marriage too lasted a short
time. These setbacks steeled her resolve and she began working as a
fitness trainer and boxing teacher. “A lot of people are interested in
the sport, but many, especially women, are scared to take it up
professionally, as they are afraid of the scars it may leave,” says
Thulasi, who has suffered a shoulder dislocation and a broken nose in
bouts.
`Light Fly, Fly High’, a documentary on
Thulasi reveals the hurdles in her life and career. Made by Norwegian
directors Beathe Hofseth and Susann Ostigaard the film was screened in
June 2014 at the Doc House documentary festival in London.
Thulasi has not hung up her gloves yet.
Determined to make her mark in pro boxing, which is more lucrative, she
is working hard to achieve her goal. Her employer, Sriram Vasantharajan,
promoter and investing partner of Toneez Fitness Centre, is backing her
dream.”She’s training to get back into fighting shape over the next few
months.I rate her as one of the best in the country, and more
importantly, as one who unfortunately never got her due despite her
accomplishments,” he says. While Thulasi wants to travel to Thailand,
Malaysia, and Dubai for pro boxing, she still needs help to make it that
far. “I work out on the beach but have no place or boxing ring to
practice as others won’t share their space,” she says.”I need help, as I
have only a few months left to train.”
Courtesy: The Times of India (19, jan. 2016)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக