nakkheeran.com :ஒரு
அழகான ஓவியம் நினைத்ததும் உருவாகிவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக கோடுகள்
வரைந்து, வண்ணம் சேர்க்கும் பொறுமைகள் இருந்தால் மட்டுமே நல்லதொரு ஓவியம்
கிடைக்கும். அப்படியொரு ஓவியத்தை கொடுத்திருக்கிறார் நலன் குமரசாமி.
;கதை
இல்லை. இருவரின் வாழ்க்கை இருக்கிறது. விழுப்புரத்தில் மொக்கை காலேஜில்
இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடிவரும் யாழினி. மூன்று
மாதத்திற்குள்ளாக அந்த கம்பெனி திவாலாகிவிட வேலை தேடி அலைகிறார்.
பிரபலம் இல்லாத கல்லூரி, அனுபவம் இல்லை என பல காரணங்களால் தட்டிக்கழிக்கப்பட, அப்பா அனுப்பும் பணத்தில் தனக்கு ஏற்ற ஒரு வீட்டில் வாடகைக்கு வருகிறார்.
;எதிர்வீட்டில் வசிக்கும் கதிரவனுடன் ஏற்படும் முதல் அறிமுகமே முற்றிலும் கோணலாக அமைகிறது. இந்த அறிமுகத்தில் துவங்கும் இவர்களது சண்டை எப்போது நிற்கிறது. அது எப்போது அன்பாக மாறுகிறது. அது எப்போது காதலாக மாறுகிறது. அது எப்படி கல்யாணம் வரை கொண்டு செல்கிறது என்பதை நம்மால் உணரமுடியாமல் போவது தான் இயக்குனரின் வெற்றி
செத்து போ, நாசமா போ என திட்டிக்கொண்டு அராஜகம் செய்யும் இவர்களுக்குள் உருவாகும் அன்பு தான் அடிப்படை. நானும் ரௌடி தான் என ஊரெல்லாம் அடிவாங்கி வரும் விஜய் சேதுபதியை, மடோனா கலாய்க்கும் காட்சிகளும் அதற்கு விஜய் சேதுபதியின் அட்டகாசமான ரியாக்ஷனும் என கலகலப்பாக நகர்கிறது
முதல் பாதியில் எடிட்டர் அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கலாம்.சேதுபதியும் மடோனாவும் பேசிய வசனங்களை விட பேசாமல் பார்த்த பார்வை உணர்த்தியது அதிகம். உதாரணமாக மடோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக சொல்லி கட்டிலுக்கு அழைப்பவனை அடித்து துவைத்த சேதுபதி, ‘உன் இடத்துல யார் இருந்தாலும் இததான் செஞ்சிருப்பேன்’ என மடோனாவிடம் சொல்லும்போது பார்க்கும் பார்வையும், தாமதமாக இண்டர்வியூ வரும் மடோனாவுக்காக திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொள்ளும் விஜய்சேதுபதியை மடோனா பார்க்கும் பார்வையையும் சொல்லலாம். மழையும் கூட ஒரு கதாபாத்திரமாக காதல் வளர்ப்பது அழகியல்.
பாடல்கள் என்று தனியாக இல்லாமல், படத்துடன் கலந்து இயல்பாக பயணிக்கும் பாடல்கள் சந்தோஷ் நாராயணன் மேஜிக். க்ளைமேக்ஸில் வரும் பின்னணி இசை மாஸ்டர் பீஸ்.சீரியஸ் ரௌடியாக விஜய்சேதுபதி செய்யும் அட்டகாசங்களும், பின்பு உண்மையிலேயே இறங்கி அடிக்கும் காட்சிகளும் அலப்பறைகள். க்ளைமேக்ஸில் சமுத்திரக்கனியுடனான சண்டை வரை நீள்கிறது கலாட்டா காதல்.
ஒருவருக்கு ஒருவர் சமைத்துக்கொடுப்பது, மழையில் குடை வாங்கி வருவது என இயல்பான காதலை அப்படியே கொடுத்திருப்பதும், காட்சியமைப்பால் அவர்கள் வசித்த வீட்டின் படிகளையும் ‘குனிந்து செல்லவும்’ அறிவிப்பு பலகையும், இரும்பு கேட்டையும் கூட நினைவு படுத்தும் வகையில் ஒரு படத்தை கொடுத்தும் வென்றிருக்கிறார் நலன்.
காதலும் கடந்து போகும் - திகட்டாத லவ் ஸ்டோரி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக