மும்பை:மும்பையில் நேற்றிரவு பெண் புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர்
கும்பல் பலாத்காரம் செய்தது. அவருடன் வந்த இளைஞரையும் கும்பல் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் புகைப்படக்காரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 5 பேரின் வரைப்படங்களை போலீசார் இன்று வெளியிட்டுள்ளனர் மும்பையில் இருந்து வெளிவரும் வாரப்பத்திரிகை ஒன்றில் போட்டோகிராபராக பயிற்சி பெற்று வருபவர் ஷாலினி(புனைப்பெயர்). இவர் நேற்றிரவு தெற்கு மும்பை லோயர் பரேலில் உள்ள பாழடைந்த சக்தி மில்லுக்கு சென்றார். துணைக்கு தனது நண்பரையும் அழைத்து சென்றார். அவர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது 2 பேர் அங்கு வந்தனர். தனியார் இடத்தில் அத்துமீறி நுழைந்திருப்பதாக ஷாலினியையும், அவரது நண்பரையும் மிரட்டினர். பத்திரிகையாளர் என்ற தைரியத்தில் ஷாலினி அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். மிரட்டல் ஆசாமிகள் செல்போனில் பேசி மேலும் 3 பேரை வரவழைத்தனர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஷாலினியையும், நண்பரையும் அடித்து உதைத்தனர். நண்பரை கட்டிப்போட்டு விட்டு, ஷாலினியை தரதரவென மில்லுக்குள் இழுத்து சென்று பலாத்காரம் செய்தனர். பலத்த காயமடைந்த ஷாலினி மயக்கம் அடைந் தார். பலாத்கார கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. மயக்கம் தெளிந்த ஷாலினி, நண்பர் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். >
ரத்தக் காயங்களுடன் இருந்த ஷாலினியை போலீசார் அருகில் இருந்த ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் குழு, அவரை பரிசோதித்தது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் மருத்துவமனைக்கு வந்து ஷாலினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஷாலினி மற்றும் அவரது நண்பர் கொடுத்த அடையாளங்களை வைத்து புகைப்படங்கள் வரையப்பட்டுள்ளன.இன்று காலை சக்தி மில்லுக்கு ஷாலினியின் நண்பரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஷாலினி பலாத்காரம் செய்த கும்பலில் உள்ள 2 பேர், ருபேஷ், சாஜித் என பெயர் சொல்லி அழைத்துக் கொண்டனர். இதனடிப்படையிலும், மற்ற அடையாளங்களை கொண்டும் 20 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் கடந்த டிசம்பர் 16ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பலாத்காரம் தொடர்பான சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு தண்டனை கடுமையாக்கப்பட்டது.இந்நிலையில் மும்பையில் 5 பேர் கொண்ட கும்பலால் பெண் புகைப்பட பத்திரிகையாளர் பலாத்காரம் செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக