பெற்றோருடனே இருக்கப் போவதாக சேரன் மகள் தாமினி அறிவிப்பு
சென்னை: பெற்றோருடனே இருக்கப் போவதாக இயக்குநர் சேரன் மகள் தாமினி
நீதிமன்றத்தில் உறுதியாகக் கூறிவிட்டார்.
கடந்த ஒரு மாதமாக இயக்குநர் சேரன் நடத்திய பாசப் போராட்டத்தில் வெற்றி
பெற்றுள்ளார்.
திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற இளைஞரைக் காதலித்தார்.
காதலை தந்தை எதிர்ப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார் தாமினி. தந்தை
மீது கொலை முயற்சி புகாரும் தந்தார்.
இதைதொடர்ந்து சேரன் போலீசில் அளித்த புகாரில், சந்துருவின் நடவடிக்கை
சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும்
கூறினார். தன் மகள் தனக்கு வேண்டும் என்று பாசப்போராட்டம் நடத்தினார்.
சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள், தாமினி தன் மகனைத்தான் விரும்புகிறார்.
அவனுடன் தான் வாழ விரும்புகிறார் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதிகள், தாமினியை விசாரித்தனர். இரு வாரங்கள்
அவகாசம் கொடுத்து தாமினியை அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க
வைத்தனர். தொடர்ச்சியாக கவுன்சலிங் கொடுக்கப்பட்டது.
இருவாரங்களுக்குப் பிறகு இன்று தாமினியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
நீதிபதிகள் விசாரித்த போது, தாமினி தான் பெற்றோருடன் செல்வதாக
நீதிபதிகளிடம் கூறினார். இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக சேரன் நடத்திய பாசப்
போராட்டம் வென்றது.
சேரன் மற்றும் அவருக்கு ஆதரவாக நின்ற இயக்குநர்கள் சந்துரு மற்றும் அவரது
குடும்பத்துக்கு எதிராகக் கூறிய புகார்களை எதிர்த்து சந்துரு
குடும்பத்தினர் இதுவரை எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக