Slavery in the City: Death of 21-year-old intern
Moritz Erhardt at Merrill Lynch sparks furore over long hours and macho
culture at banks.
Young German worked until 6am for three consecutive days before collapse at home in east London
இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில்
பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச்
சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது
நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். நேற்று
இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு
தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய
விசாரணையில், மோரிட்ச் எர்ஹார்ட் உள்பட சுமார் 300 பேர் இதே போல்
அப்பகுதியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணிபுரிந்தனர். படிப்பை முடித்து
விட்டு புதிதாக பணியில் சேர்ந்திருந்தனர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3
மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து
கிடப்பதற்கு 3 தினங்களுக்கு முன்புதான் கடைசியாக அவரது அறை நண்பர்கள் அவரை
பார்த்துள்ளனர். அதன்பின் அவரை இறந்து கிடந்த நிலையில் தான் கண்டனர்.
வங்கியில் நடத்திய விசாரணையில் விடாமல் இரவு பகலாக 72 மணிநேரம் மோரிட்ச்
எர்ஹார்ட் பணிபுரிந்து விட்டு நள்ளிரவு அறைக்கு திரும்பியது
தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், சாவுக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து வேலை செய்ததால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மோரிட்ச் எர்ஹார்ட்டின் வங்கிக்கு அனுப்பிய இமெயிலில், எனது குடும்பத்தினர் என்னிடம் மிகவும் எதிர்பார்க்கின்றனர். எனவே விடாமல் கடுமையாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக