வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

1.5 கி.மீ., வாய்க்கால் வெட்டும் விவசாயிகள் ! பொது பிணி துறையின் அலட்சியம்

சென்னை: பொதுப்பணித் துறையினர் கைவிட்டும், துவண்டு விடாத தஞ்சை
மாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக, தங்கள் சொந்த உழைப்பில், ஒன்றரை கி.மீ., தூரம் வாய்க்கால் வெட்டி வருகின்றனர்.டெல்டா மாவட்டங்கள்: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் வெண்ணாறு, காவிரி, கல்லணை கால்வாய், அவற்றின் துணை ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் புதர் மண்டி, மணல் மேடாகி தூர்ந்து கிடக்கின்றன. இவற்றில், சம்பா சாகுபடிக்கான தண்ணீரை எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறையிடம், விவசாயிகள் முறையிட்டனர். ஆனால், பொதுப்பணித்துறையினர் முக்கிய பாசன வழித் தடங்களை மட்டும் சீரமைத்து வருகின்றனர். இதனால், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு நடுவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு, சொந்த உழைப்பில் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக வாய்க்கால் வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. . இந்த பொது பிணி துறை அதிகாரிகள் முகமூடி கொள்ளையர்களை விட கேவலமானவர்களாக இருகின்றார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கல்லணை கால்வாய்க்கு வலது பக்கம், எங்களின், 80 ஏக்கர் நிலங்கள் உள்ளன. காசம்பள்ளி வாய்க்கால் அருகே உள்ள மதகு வழியாக, எங்களுக்கு தண்ணீர் வர வேண்டும். ஆனால், பொதுப்பணித் துறையினர் முறையான வாய்க்கால் வசதியை ஏற்படுத்தி தரவில்லை. அடிக்கடி மூடுகின்றனர்: இதனால், சாலையை ஒட்டி உள்ள தூர்ந்து போன வாய்க்காலை நாங்களே வெட்டி, தண்ணீர் கொண்டு செல்கிறோம். காலம், காலமாக, இதே நடைமுறையை தான் பின்பற்றி வருகிறோம். ஒவ்வொரு முறையும் நாங்கள் அமைக்கும் கால்வாயை மூடுவதையே பொதுப்பணித் துறையினர் வழக்கமாக கொண்டுள்ளனர். "மாவட்ட, நீர்வழித் தட வரைபடத்தில், இந்த வாய்க்கால் இல்லை' என, அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். அபரிமிதமான நீர் வரத்துள்ள இந்த நேரத்தில், சாகுபடி செய்ய, மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம். எனவே, பாசனத்திற்குரிய ஏற்பாடுகளை, அதிகாரிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் கேட்கின்றனர் என்பதற்காக, புதிய பாசன வழித்தடங்களை அமைக்க முடியாது. அதில், உள்ள சாதக, பாதக அம்சங்களை ஆராய வேண்டும். இருக்கும் கால்வாய்கள், வாய்க்கால்களை சீரமைக்கவே போதுமான நிதி ஆதாரம் இல்லை; எனவே, புதிய நீர் வழித்தடங்களை எப்படி ஏற்படுத்த முடியும்.>உத்தரவு அவசியம்: புதிய நீர்வழித்தடங்களை அமைத்தால், சில நேரங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மாவட்ட கலெக்டர், உத்தரவு கிடைத்தால் மட்டுமே புதிய நீர் வழித்தடத்தை அமைக்க முடியும். கலெக்டரும் எளிதில் முடிவு எடுத்து விட முடியாது. அதற்கு அவர், பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறின dinamalar.com

கருத்துகள் இல்லை: