டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உணவு உத்தரவாத
திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், உணவுக்கு
உத்தரவாதம் தரும் இத்திட்டத்தால் நாட்டிலுள்ள 80 கோடி மக்கள் பயன் பெறுவர்
என்று குறிப்பிட்டார். தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம்,
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கனவுத் திட்டம் என்றும்
குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி ஏழைகளின் துன்பத்தை
நெருங்கி கவனித்தவர் என்று சோனியா காந்தி கூறினார். உணவு உத்தரவாத
திட்டத்தால் கர்ப்பிணிகளும், இளம்பெண்களும் பயனடைவர் என்று கூறினார்.
மேலும் பேசிய சோனியா காந்தி இந்த திட்டம் ஏழைகள் பட்டினியோடும்,
ஊட்டச்சத்து இன்றியும் வாடும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில் இருக்கும்
என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக