சனி, 24 ஆகஸ்ட், 2013

சிக்கிய பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர்களும் தீவிரவாதிகளா ? கியூ பிரான்ச் விசாரணை

புதுக்கடை:புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் நேற்று
இரவு நடந்த சோதனையில் பெங்களூர், தர்மபுரியை சேர்ந்த 6 பேர் சிக்கினர். இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் ஊடுருவி மதுரை, மயிலாடுதுறை நகரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு  இருக்கிறது. கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.


குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை பகுதிகளில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட காலமாக மூடப்பட்டு கிடந்த தேங்காப்பட்டணம், குளச்சல், ராஜாக்கமங்கலம் போன்ற கடற்கரை சோதனை சாவடிகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கடற்கரை வழியாக வரும் அனைத்தும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் நேற்றிரவு தேங்காப்பட்டணம் கடற்கரை சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னை பதிவு எண் கொண்ட கார் ஒன்று வந்தது. அதில் 6 பேர் இருந்தனர். அவர்களுக்கு தமிழ் தெரிய வில்லை. அவர்கள் 6 பேரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்த புதுக்கடை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில் இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த அகமது (43), அக்ரம் (30), அக்ரா உசேன் (41), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் (25), ஜாகீர் (27), இஸ்மான் (26) என்பது தெரிய வந்தது. கேரள மாநிலம் கொச்சி கடற்கரை பகுதிக்கு சுற்றுலா வந்ததாகவும், தேங்காப்பட்டணம் துறைமுக பகுதி அழகாக இருக்கும் என்பதால் அதை காண வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்ட 6 பேரிடம் கியூ பிரிவு, உளவு பிரிவு போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: