திங்கள், 19 ஆகஸ்ட், 2013

தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும்

மும்பை: தங்கத்தின் மீதான முதலீட்டை குறைக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளாலும், சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளதாலும், நம் நாட்டில், ஆபரண தங்கத்தின் விலை, மீண்டும் உயரத் துவங்கியுள்ளது. கடந்த, 50 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை, 4,536 ரூபாய் கூடியுள்ளதால், டிசம்பருக்குள், விலை உயர்வு, புதிய உச்சத்தை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில், விலை உயர்வால், "தங்க நகைகளின் விற்பனை, 25 முதல், 30 சதவீதம் வரை பாதிக்கும்' என, நகை வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர அன்னிய செலாவணி கையிருப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியால், மத்திய அரசின் நிதி கையிருப்பு வெகுவாகக் குறைந்தது. நம் நாட்டின் இறக்குமதியில், முதலிடம் பெறுவது கச்சா எண்ணெய். இதற்கான பணத்தை, அமெரிக்க டாலர் மதிப்பில் செலுத்துவதால், அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்தது.அதனால், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. "பொதுமக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டது. இதன் பயனாக, ஜூன் மாதம், தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது. ஜூன், 28ம் தேதி, ஒரு சவரன் தங்கம், 19,032 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இந்நிலையில், தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல கெடுபிடிகளை அறிவித்தது. அதே நேரத்தில், சர்வதேச அளவில், தங்கத்தின் விலை உயர்ந்ததாலும், ரூபாய் வீழ்ச்சி காõரணமாகவும், கடந்த இரண்டு நாட்களில், யாரும் எதிர்பாராத வகையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த, 50 நாட்களில் மட்டும், 4,536க்கு மேல், ஒரு சவரன் தங்கம் விலை உயர்ந்துள்ளது."பண்டிகை காலம், கல்யாண சீசன் காரணமாக, விலை உயர்வு தொடரும்; 10 கிராம் தங்கத்தின் விலை, டிசம்பருக்குள், 31 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விடும்' என, தங்க நகை வியாபாரி ஒருவர் கூறியுள்ளார்."தங்கத்தின் மீதான இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதால், சப்ளை பாதிக்கப்படும். இதனால், தேவை அதிகரிக்கும் போது, விலை உயர்வு தவிர்க்க முடியாது' என, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், தங்க நகைகள் விற்பனை, 25 முதல், 30 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக, பெங்களூரைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி ஒருவர் கூறினார்.

தங்கத்தில் முதலீடு:

மலபார் தங்க, வைர நகை வியாபார நிறுவனத்தின் துணை இயக்குனர், ஷமீர் ஷரீப் கூறுகையில், ""உயர் நடுத்தர வகுப்பினரும், கீழ்த்தட்டிலுள்ள நடுத்தர மக்களுமே, தங்க நகைகளை, அதிகம் வாங்குகின்றனர். அதாவது, விலையை பற்றி கவலைப்படாமல், தங்கத்தில் முதலீடு செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் ஒரு வகையினர். மற்றொரு தரப்பினர், ஒரு கிராம் தங்கம், 4,000 ரூபாய் ஆகிவிடுவோமோ என பயந்தின் காரணமாக வாங்குபவர்கள்,'' என்றார். நேற்று முன்தினம், சென்னையில், ஒரு கிராம் தங்கம், 2,946 ரூபாயை எட்டி, ஒரு சவரன், 23,568 ஆக இருந்தது. இந்த விலையில் நேற்று, எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வெள்ளிக்கிழமை, அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, 62.03 ஆக இருந்தது. இந்த வாரம், ரூபாயின் மதிப்பு, 60.50 - 61.40 என்ற அளவுக்குள் இருக்கக் கூடும் என, வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை கவரும் வகையில், சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இதனால், வரும் வாரத்திலிருந்து நிலைமை சரியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஈடாக வைத்து கடன் பெறலாம். இந்தியாவில் ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை ஈடுகட்ட, லண்டன் தங்க மார்க்கெட் சங்க தலைவர் டேவிட் கோர்நெயில் கூறியதாவது:கடந்த, 2009ல் சர்வதேச நிதியத்திடமிருந்து (ஐ.எம்.எப்.,) இந்தியா, 200 டன் தங்கத்தை வாங்கியது. தற்போது அன்னிய செலாவணி கையிருப்பு குறைவால், சிக்கலில் தவிக்கும் இந்தியா, இந்த, 200 டன் தங்கத்தை, ஐ.எம்.எப்., வசம் ஈடாக வைத்து டாலராக பெற்றால், நிலைமையை சரி செய்யலாம். ரூபாய் மதிப்பு ஸ்திரத்தன்மை பெற்ற பிறகு, டாலரை செலுத்தி தங்கத்தை

கருத்துகள் இல்லை: