வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஏராளமான குற்ற வழக்குகள் உள்ள ரித்தீஷ் MP மீது ஏன் நடவடிக்கை இல்லை ?


தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபடுவதால் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா மஞ்சூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித்தலைவர் தங்கராஜ் தாக்கல் செய்த மனு: மதுரையில் திமுக பொதுச்செயலர் அன்பழகனை வரவேற்க 2012 அக்டோபர் 30 -காத்திருந்த போது சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ் தனது ஆதரவாளர்கள் சிலருடன் வந்து என்னை ஜாதி பெயரைச்சொல்லி தாக்கினார். இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ரித்தீஷ் மீது வழக்கு பதிவாகியுள்ளது. மேலும் ரித்தீஷ் மீது காஞ்சிபுரம், பரமக்குடி, அபிராமம், திருப்பாலக்குடி, ராமநாதபுரம், மதுரை தல்லாகுளம்,சிலைமான் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2008 ம் ஆண்டு முதல் 3 வருடங்களில் மேற்கண்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
எனவே ரித்தீஷ் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110- வது விதியின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு 2013 ஆக.5 ல் மனு கொடுத்தேன். ஆனால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதே போன்று பமரக்குடி தாலுகா பாண்டியூரைச் சேர்நத சாமிதுரை தாக்கல் செய்த மனுவி்ல, 2013 ஜூன் 27-ம் தேதி பரமக்குடியில் திமுக மாவட்ட செயலர் சுப.தங்கவேலன் வீ்ட்டு முன்பு நான் நின்று, திமுக பொருளாளர் மு,க,ஸ்டாலின் வரவேற்பு தொடர்பாக கொண்டிருந்த போது 6 பேர் ஆயுதங்களுடன் வந்து தாக்கினர். ரித்தீஷ் எம்பி தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக புகார் கூறினேன்.
ஆனால் பரமக்குடி நகர் காவல் ஆய்வாளர், ரித்தீஷ் பெயரை வழக்கில் சேர்க்கவில்லை. எனவே இந்த வழக்கில் ரித்தீஷ் பெயரை சேர்க்க பரமக்குடி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.தினமணி.com

கருத்துகள் இல்லை: