புதுடில்லி: நிலக்கரி ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமானதாக மத்திய
அமைச்சர் கூறியதை தொடர்ந்து , பார்லி.யில்இந்த விவகாரம் பெரும் புயலை
கிளப்பி உள்ளது. இந்நிலையில்இந்த வழக்கி்ல் முக்கிய ஆவணங்களை மத்திய அரசு
தரவில்லை என சி.பி.ஐ. ஒரு புது குற்றச்சாட்டினை மத்திய அரசு மீது
சுமத்தியுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில், 50
நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தி்ல் 13 எப்.ஐ.ஆர்.கள்
போடப்பட்டுள்ளன. இதனை மத்திய நிலக்கரி சுரங்க அமைச்சகத்திற்கு கடந்த மே
மாதம் அனுப்பிவைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.அதில்,காங்.
எம்.பி.க்கள் நவீன்ஜிந்தால்,விஜய்தர்தா, முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி
நாராயணராவ் ஆகியோர் மீதான புகார்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் இன்னும்
சி.பி.ஐ. கைக்கு கிடைக்கவில்லை.மொத்தம் 16 முக்கிய ஆவணங்கள் விசாரணைக்கு
தேவைப்படுகிறது. இவ்வாறு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக