புதன், 21 ஆகஸ்ட், 2013

விநோதினியை அசிட் வீசி கொன்றவனுக்கு கூடுதல் தண்டனை கோரி மேன்முறையீடு செய்வோம், தந்தை


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
காரைக்கால்:தனது மகளை ஆசிட் வீசி கொன்றவருக்கு கூடுதல் தண்டனை விதிக்க கோரி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக வினோதினியின் தந்தை கூறியுள்ளார். புதுவை மாநிலம் காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்த ஜெயபால் மகள் வினோதினி (22). சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரை, காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி திருவேட்டக்குடியை சேர்ந்த அப்பு என்ற சுரேஷ் (28) ஒருதலையாக காதலித்தார். அவரது காதலை வினோதினி ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த வினோதினி மீது ஆசிட் வீசினார். இதில் வினோதினி முகம் கருகி பார்வை பறிபோனது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த பிப்ரவரி 12&ம் தேதி இறந்தார். சுரேஷை காரைக்கால் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த காரைக்கால் மாவட்ட கோர்ட், சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. மேலும் வினோதினியின் தந்தை ஜெயபால், அவரது நண்பர் பத்மநாபன் ஆகியோர் மீது ஆசிட் வீசி காயப்படுத்தியதற்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுரேஷை காரைக்கால் கிளைச்சிறையில் போலீசார் அடைத்தனர்.

ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாக சுரேஷ் தரப்பினர் கூறியுள்ளனர். இதுகுறித்து வினோதினியின் தந்தை ஜெயபால் கூறுகையில், ‘‘குற்றவாளிக்கு தூக்கு அல்லது இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்பார்த்தோம். குற்றவாளி மேல்முறையீடு செய்யும்போது, கூடுதல் தண்டனை கோரி நாங்களும் மேல்முறையீடு செய்வோம்’’ என்றார். அரசு தரப்பு வக்கீல் வெற்றிச்செல்வன் கூறுகையில், ‘‘குற்றவாளிக்கு கூடுதல் தண்டனை கோரி மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.தீர்ப்பு வெளியானதையடுத்து, நேற்றிரவு வினோதினியின் தந்தை ஜெயபால் மற்றும் உறவினர்கள் புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, குற்றவாளி சுரேஷுக்கு தண்டனை கிடைக்க உதவியதற்காக நன்றி தெரிவித்தனர்.

1 கருத்து:

ஜமால் சொன்னது…

இவனுக்கு ஆயுள் தண்டனை என்பது மிகவும் குறைவு இவனை தூக்கிலிட வேண்டும்