புதன், 21 ஆகஸ்ட், 2013

ஏற்கனவே சம்பளம் வாங்கிய பாடகர்களுக்கு ஏன் ராயல்டி தரவேண்டும் ? தயாரிப்பாளர்கள் போர்க்கொடி

சினிமாவில் பாடுவதற்கு பாடகர்களின் திறமை, பாப்புலா‌ரிட்டியை வைத்து சம்பளம் தரப்படுகிறது. சினிமாவில் பாடுவதற்குதான் அந்தச் சம்பளம். அதே பாடலை தொலைக்காட்சி, வானொலி, அலைபேசி ‌ரிங்டோன் என எந்தவொரு வெளி ஊடகத்துக்கு தந்தாலும் அதில் வரும் பணத்தில் ராயல்டி தொகை தர வேண்டும் என்கிறார்கள்.இசையமைப்பாளர்களும் பாடலாசி‌ரியர்களும் பாடகர்களைப் போல ராயல்டி கோருகிறார்கள்.உதாரணத்துக்கு இரண்டு கோடி சம்பளம் தந்து ஒரு இசையமைப்பாளரை படத்துக்கு ஒப்பந்தம் செய்கிறோம். ஆறு பாடல்களை அவர் தருகிறார். ஆறு பேர் பாடுகிறார்கள், ஆறு பேர் பாடல்களை எழுதுகிறார்கள்.இப்போது அந்தப் பாடல்களை சோனி மாதி‌ரி ஒரு ஆடியோ நிறுவனத்துக்கு தயா‌ரிப்பாளர் விற்றுவிடுகிறார். அந்தப் பணத்தில் மேலே உள்ள மூவரும் - இசையமைப்பாளர், பாடகர், பாடலாசி‌ரியர் - ராயல்டி தர வேண்டுமென கேட்கிறார்கள்.
பாடல்களை வாங்கிய நிறுவனம் பாடல்களை சிடிகளாக போட்டு விற்றால் அந்த வருமானத்திலும் ராயல்டி கேட்கிறார்கள். இப்போது ஆடியோ நிறுவனம் என்ன சொல்கிறது என்றால், ஏற்கனவே சம்பளம் வாங்கியவர்கள் நாங்கள் பணம் போட்டு சிடிகள் தயார் செய்து, விளம்பரப்படுத்தி விற்கும் போது அதில் எப்படி ராயல்டி கேட்கலாம்? அவர்களுக்கு தந்தால், தயா‌ரிப்பாளருக்கு நாங்கள் தந்த பணத்தை எப்படி எங்கே சம்பாதிப்போம்?


இந்த இடியாப்ப சிக்கலுக்கு இன்னும் தீர்வு கண்டடையப்படவில்லை. அதற்குள் தமிழகத்திலும் பாடகர்கள் சங்கம் அமைத்திருக்கிறார்கள். இனி நெருக்கடி அதிகமாகும். தயா‌ரிப்பாளர்தான் அனைத்து இடியையும் கடைசியில் தாங்கப் போகிறா

கருத்துகள் இல்லை: