திங்கள், 19 ஆகஸ்ட், 2013

உயிரிழந்த பெண்ணை 42 நிமிடம் கழித்து பிழைக்க வைத்த ஆஸி. டாக்டர்

 ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனாஷ் மருத்துவ
மையத்திற்கு சென்ற வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி அழைத்து வரப்பட்டார். 41 வயது நிரம்பிய வநேசா தனசியோ என்ற அந்தப் பெண்ணுக்கு இதயத்திலிருந்த ரத்தக்குழாய் ஒன்று முற்றிலுமாக அடைத்திருந்தது.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த பின் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. ஆயினும், மருத்துவர்கள் மனம் தளரவில்லை. ஆஸ்திரேலியாவிலேயே அரிதான லூகாஸ்-2 என்ற கருவியை உபயோகித்து அவரது மூளைக்குத் தொடர்ந்து ரத்தம் செல்லுமாறு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். பின்னர் இதய அறுவை சிகிச்சை நிபுணரான வாலி அகமர் நோயாளியினுடைய ரத்தக்குழாயில் இருந்த அடைப்பை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சியில் வெற்றியடைந்த பின்னர் தனசியாவின் நின்றுபோன இதயம் 42 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு சிறிய அதிர்வுக்குப்பின் வேலை செய்ய ஆரம்பித்தது.தனசியாவை உயிர்ப்பிப்பதற்கு சில மருந்துகளையும், அதிர்வுகளையும் அவருக்குக் கொடுத்ததாக மருத்துவர் அகமர் தெரிவித்தார். தனசியா மீண்டு வந்துள்ளது மிகப்பெரிய அதிசயம் என்றும் அவர் கூறியுள்ளார தான் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது வரை நினைவிருந்ததாகக் கூறும் தனசியா, அதன்பின்னர் ஒரு வாரம் கழித்துதான் தான் நலமுடன் இருப்பதை உணர்ந்ததாக சந்தோஷத்துடன் கூறுகின்றார் malaimalar.com

கருத்துகள் இல்லை: