திங்கள், 19 ஆகஸ்ட், 2013

முலயம்சிங்கின் ஆதரவை நாடும் காங்கிரஸ் ! உணவு பாதுகாப்பு மசோதா

முலாயம் சிங்குடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு: உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவு கேட்டனர்பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மசோதாவை நாளை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முக்கிய கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி திரட்டி வருகிறது. இந்நிலையில், உணவுத்துறை மந்திரி கே.வி.தாமஸ், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோர் இன்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்தனர். அப்போது உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற ஆதரவு அளிக்கும்படி முலாயமிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவும் உடனிருந்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாடி கட்சியின் தலைமை கொறடா கூறும்போது, “கட்சியின் பாராளுமன்றக் குழு நாளை காலை கூடி, உணவு பாதுகாப்பு மசோதா தொடாபாக முடிவு செய்வார்கள்” என்றார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. விவசாயிகள் நலனை பாதுகாக்கவும், விளைபொருட்களுக்கு லாபம் கிடைப்பதற்கும் அரசு வாக்குறுதி அளித்தால் உணவு பாதுகாப்பு மசோதாவை தனது கட்சி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறி வருகிறார்.

இதேபோல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கு மற்றொரு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் மசோதாவை ஆதரிக்கிறது. ஆனால், அவசர சட்டம் கொண்டு வந்து அதை அமல்படுத்துவதை அக்கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: