இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன
ராணுவத்தின் தலைவலியை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக்கொண்டிருக்கும்
வேளையில் புதிய திருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள
எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள
எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இங்குள்ள 76-வது
கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி
நுழைந்துள்ளனர்.
சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து
உள்ளூர் போலீசார் எல்லைப் பகுதி அருகே சென்று பார்த்தனர். அப்போது கூடாரம்
அமைப்பதற்காக மியான்மர் ராணுவ வீரர்கள் தரையை சுத்தப்படுத்திக்
கொண்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுக்கு
தகவல் அளித்துள்ளனர்.
இந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றன maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக