புதன், 21 ஆகஸ்ட், 2013

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மதவெறியர்களால் படுகொலை !


தபோல்கர்மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர்
நரேந்திரசார்யாஜி மகாராஜ்ராட்டிய மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளரும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளருமான நரேந்திர தபோல்கர் செவ்வாய்க் கிழமை காலை 7.20 க்கு புனே நகரத்தில் ஓம்கரேஸ்வரர் மேம்பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலையின் பின்பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே தபோல்கர் மரணமடைந்தார்.< நரேந்திர தபோல்கர்
மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தி வந்த தபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி உள்ளார். தற்போது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சணல் இடமருகுவின் உற்ற நண்பரும் கூட.
மக்களை முட்டாள்களாக்கும் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நரேந்திர தபோல்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர். சமூகத்தை அறிவியல் மனப்பான்மையுடன் வளர்ப்பதில் அவரது நிர்மூலன் சமிதி முன்னணியில் நின்றது. சிவசேனா, பிஜேபி போன்ற கட்சிகள் வீறு கொண்டு எழத் துவங்கிய 90-களில், மராட்டிய மாநிலத்திலேயே இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவது அப்படி ஒன்றும் எளிதல்ல. தபோல்கர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் மன்றத்தில் சாமியார்களை, மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார்.
தற்போது மராட்டிய மாநில அரசு, மூடநம்பிக்கைகள் மற்றும் போலி சாமியார்களுக்கெதிராக ஒரு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய உள்ளது. அந்த சட்டத்தை அறிமுகம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தை மாநில அரசுக்கு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு போராட்டங்களை இவர் தொடரந்து நடத்தி வந்தார். சாதனா என்ற முற்போக்கு பத்திரிகையையும் நடத்தி வந்தார். சட்டம் வரும் என்ற நம்பிக்கையை முதல்வர் குலைத்து வருவதாக சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார்.
தெய்வங்களுக்கு காணிக்கை என்ற பெயரில் செல்வத்தை நாசமாக்குவது மற்றும் தெய்வங்களை நீரில் கரைத்து பொதுப் பயன்பாட்டிற்கான தண்ணீரை மாசுபடுத்துவது போன்றவற்றுக்கு எதிராகவும் பல இயக்கங்களை எடுத்திருக்கிறார். எனவே இவருக்கு எதிரிகள் போலி சாமியார்கள் மட்டுமின்றி இந்துமத வெறியர்களும்தான்."நரேந்திரசார்யாஜி மகாராஜ்" width="320" />

தபோல்கருக்கு எதிரிகள் போலி சாமியார்கள் மட்டுமின்றி இந்துமத வெறியர்களும்தான். (மூட நம்பிக்கை எதிர்ப்பு மசோதா தொடர்பாக டாக்டர் நரேந்திர தபோல்கரை எதிர்த்து எச்சரிக்கை விடுத்திருந்த சங்கராச்சாரியார் நரேந்திராச்சார்யாஜி மகராஜ்)
மேலும் நாசிக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் அநியாய தீர்ப்புகளையும், அவர்கள் நடத்தும் கௌரவக் கொலைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தார். அந்த வகையில் சாதி வெறியர்களின் கோபத்துக்கும் தொடர்ந்து ஆளாகி வந்தார். பரிவர்த்தன் என்ற பெயரில் போதை அடிமைகளை மீட்டு எடுக்கும் மையம் ஒன்றை தனது சொந்த ஊரான சதாராவில் நடத்தி வருகிறார். சதாரா நகரின் மக்கள் மத்தியில் தபோல்கருக்கு நல்ல மரியாதை இருக்கிறது.
சதாராவில் இன்று மக்கள் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். அவரது வீட்டுக்கு வந்த மக்கள் மிகுந்த கோபத்துடன் ஆங்காங்கு சேர்ந்து மௌன ஊர்வலம் செல்கின்றனர். அறுபது வயதை தாண்டிய பிறகும் ஓய்வெடுக்காது, ஏதேனும் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவராக உட்கார்ந்து கொண்டு சம்பாதிப்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், சமூகத்தின் நல்வாழ்விற்காக, சமூகத்தின் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தனது உயிரைத் தியாகம் செய்த தபோல்கருக்கு நாம் அஞ்சலி செலுத்துவது என்பது, அவர் போராடிய பாதையில் தொடர்ந்து போராடுவதிலும், அதில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறுவதிலும் தான் இருக்கிறது.
இவரை கொல்வதற்கு பார்ப்பனிய இந்துமதவெறியர்களும், ஆதிக்க சாதிவெறியர்களும்தான் காரணம் என்பதை உலகமே அறியும். இந்து மத வெறியர்களை முறியடிப்பதன் மூலம்தான் உழைக்கும் மக்கள் நிம்மதியையும், விடுதலையையும், மகிழ்ச்சியையும் பெற முடியும்

கருத்துகள் இல்லை: