வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ரூபாய் மதிப்பில் எப்போதும் இல்லாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வங்கிகளின் பணப்பரிமாற்றத்துக்கு இடையே முன்பு எப்போதும் இல்லாத வகையிலரூ.65.56 ஆக சரிந்து இறுதியில் ரூ.65.17-இல் நிலைத்தது.>வங்கிகளில் டாலர்கள் தேவை உயர்ந்ததால் இந்த நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் இது ரூ.70 ஆக சரியக்கூடிய அபாயம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, சமீபகாலமாக தொடர்ந்து சரிந்து வருகிறது.நேற்று முன்தினம் வங்கிகளின் பரிமாற்றத்துக்கு இடையே ரூபாயின் மதிப்பு ரூ.64.11 இல் முடிந்தது. இந்நிலையில், நேற்று காலை வங்கிகளில் பணப்பரிமாற்றம் தொடங்கிய உடனேயே ரூபாயின் மதிப்பு 74 காசுகள் சரிந்து ரூ.64.85 ஆனது. ஆனால், வர்த்தகத்தின் இடையே அது ரூ.65.56 வரை உயர்ந்தது. இதனால் இறக்குமதியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே மதியம் ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து ரூ.65.17 ஆனது.


ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் இறக்குமதியாளர்கள், தங்களுடைய சரக்குகளுக்கு அதிக பணம் தர வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் முந்தைய பாக்கிகளை சரி செய்வதற்காக அவர்கள் உடனடியாக தங்கள் பணத்தை செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் பெருமளவில் டாலர்களை வாங்குகின்றனர்.

இதேபோல், புதிய இறக்குமதிக்கு கூடுதல் அமெரிக்க டாலர்களை தரவேண்டியிருப்பதாலும், டாலர்கள் அதிகளவில் வாங்கப்படுகின்றன. இவற்றின் காரணமாக தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு தற்காலிகமானதுதான். இது பற்றி அச்சப்பட தேவையில்லை. அடுத்த காலாண்டில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

ரூபாயின் மதிப்பு சரிந்தபோதும், இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று கணிசமான ஏற்றம் நிலவியது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று 407.03 புள்ளிகள் உயர்ந்து 18,312.94 ஆகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 105.90 புள்ளிகள் உயர்ந்து 5,408.45 ஆகவும்  webdunia.com

கருத்துகள் இல்லை: