ஐதராபாத்: ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக
உள்ளதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறைமூகமாக தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பவருமான ஷர்மிளா ரெட்டி இதனை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தங்களை முதுகில் குத்தியிருந்தாலும், தாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், மத்தியில் 3வது அணி அமைந்தால், அதனை ஆதரிக்கவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தயக்கம் காட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தல்களிலும், சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற தமது தந்தை ராஜசேகர ரெட்டி தான் காரணம் என்று கூறியுள்ள அவர், காங்கிரஸ் நன்றி மறந்து தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக புகார் கூறினார்.
தனித்து போட்டியிட்டாலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் என்றும், மக்களவை தேர்தலில் 35 இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக