விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகளைக் கண்டித்து,
பின், குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் இளங்கோவனிடம், காமாட்சியை போலீசார் அழைத்து சென்றனர். தனக்கு, இடம் ஒதுக்கீடு செய்வதில், அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக துணை ஆட்சியர் இளங்கோவனிடம், காமாட்சி கூறினார்.
செஞ்சி தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் ஆதி பகவனை, அழைத்து, மனு மீது, ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுத்து பதிலளிக்க உத்தரவிட்டார்
பெண் ஒருவர், மூன்று முறை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மனைவி காமாட்சி, 35. அசோகன் இறந்து விட்டார். இதையடுத்து இவர், அதே பகுதியில், தன் தாய், தங்கையுடன் வசித்து வந்தார்.
கடந்த ஓராண்டிற்கு முன், திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக, இவரது வீட்டை அதிகாரிகள் இடித்தனர்.இதற்கு பதிலாக, அப்பகுதியில் உள்ள மலை அருகில், அரசு மூலம் மாற்று இடம் ஒதுக்கித் தரப்பட்டது. அந்த இடத்தில், காமாட்சி குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில், கிராமப்பகுதியில், இடம் ஒதுக்கி தரக் கோரி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில், பல முறை மனு கொடுத்தார். மனுவை, விசாரிக்கும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிடுவதோடு நிறுத்தி விடுகின்றனர்; மாற்று இடம் கொடுக்கவில்லை. அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க தாமதித்ததால், ஏற்கனவே, இரு முறை கலெக்டர் அலுவலகத்தில், காமாட்சி மற்றும் அவரது தாய், சகோதரி ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு முன் தீக்குளிக்க முயன்ற போது, கலெக்டர் அழைத்து பேசி, நடவடிக்கை எடுக்க, திண்டிவனம் ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிட்டார். ஆனாலும் பலனில்லை. இதனால், மனமுடைந்த காமாட்சி, நேற்று, தன் தாய் பாஞ்சாலியுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பகல், 12:15 மணிக்கு கலெக்டர் சம்பத், அறைக்கு முன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியிலிருந்த தாலுகா போலீசார் அவரைத் தடுத்தனர். இவர் தீக்குளிக்க முயற்சி செய்வது, இது, மூன்றாம் முறையாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக