உத்தரகாண்ட் வெள்ளத்தில், பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பெயரில்,
அரசியல் கட்சிகள், தனியார், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்களிடம், நிதி திரட்டுவதில், களம் இறங்கி உள்ளன.இயற்கை இடர்பாடுகளின் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாக, பல்வேறு அமைப்புகள், நிவாரண நிதி வசூலில், களம் இறங்கி விடுகின்றனர்.இவ்வாறு வசூல் செய்யப்படும் பணம், பொருட்கள், பாதிக்கப்பட்டோரை, முறையாக சென்றடையுமா, என்ற கேள்வி, கடந்த காலங்களில் எழுந்தது. இதை தடுக்கும் வகையில், நிவாரண நிதியை, அரசே திரட்டி வழங்கியது.தற்போது உத்தரகாண்ட்டில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, அரசின் சார்பில், நிதி திரட்டுவது குறித்து, அறிவிப்பு வெளியாகவில்லை.இதை, சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரசியல் கட்சிகள், தனியார், தன்னார்வ அமைப்புகள், "உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி' என்னும் பெயரில், வசூலில் களம் இறங்கி விட்டன. திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முறையாக சென்றடையுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவர்களிடம் நிதி வழங்கும் பட்சத்தில், அதில் ஒரு பகுதியை, தங்கள் அமைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு, உடனடியாக, உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதி திரட்டுவது குறித்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக