லண்டன்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியை
சேர்ந்த கோடீஸ்வரர் சந்தோக் சிங். இவரது மனைவி அம்ரித் கவுர். இவர்களுக்கு
8 வயதில் குர்கிரண் கவுர் என்ற பெண் குழந்தை இருந்தாள். இரண்டு
மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியா வந்தனர். அப்போது சிறுமி உடல்
நலம் பாதிக்கப்பட்டாள். கானா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டாள். எனினும் சிகிச்சை பலனின்றி குர்கிரண் கவுர் இறந்தாள்.
இதையடுத்து அவளது உடல் உறுப்புகள் பிரேத பரிசோதனையின் போது வெட்டி
எடுக்கப்பட்டு பாட்டியாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
அங்கு
சிறுமியின் உடல் உறுப்புகளை பரிசோதித்த டாக்டர்கள் மூளை பாதிப்பால்
இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் குர்கிரண் கவுரின்
பெற்றோர் அம்ரித் கவுர், சந்தோக் சிங் ஆகியோர், தங்கள் மகள் மர்ம மரணம்
குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து
அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிறுமியின் உடல் இங்கிலாந்து
கொண்டு வரப்பட்டது. ஆனால், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இயலாது.
இந்திய டாக்டர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் ஏற்க முடியாதுÕ என்று
இங்கிலாந்து டாக்டர்கள் தெரிவித்தனர்.
குர்கிரண் கவுரின் உடல்
உறுப்புகள் அனைத்தும் வந்தால்தான் மீண்டும் பிரேத பரிசோதனை செய்து உண்மையை
கண்டறிய முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குர்கிரண் கவுர்
இறந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவளது உறுப்புகளை இங்கிலாந்து
அனுப்ப வேண்டும் என்று இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக