ராஜிவ் காந்தி மறைவுக்குப் பின் நடந்த தேர்தலில் திமுக தலைவர்
கருணாநிதியும், பரிதி இளம்வழுதியும் மட்டுமே வென்றனர். கருணாநிதி தனது
பதவியை ராஜினாமா செய்துவிட தனி ஆளாக சட்டசபையில் திமுகவின் மரியாதையைக்
காப்பாற்றிக் காட்டியவர் பரிதி.
மிகச் சிறந்த பேச்சாளரான இவர் சட்டசபை துணை சபாநாயகராகவும் செய்தித் துறை
அமைச்சராகவும் இருந்தவர். ஆனால், சென்னை மாவட்ட திமுகவில் இவரை ஸ்டாலின்
ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிகவும் மனம் நொந்து போய் இருந்தார் பரிதி.
திமுகவின்
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சென்னை
விமான நிலையத்தில் சந்தித்துப் பேசினார். ஜெயலலிதாவின் கொடநாடு
பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
மு.க.ஸ்டாலினுடன்
ஏற்பட்ட முரன்பாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக திமுகவின் தலை மையால்
புறக்கணிக்கபட்டுள்ளார். அவரிடம் இருந்த மாநில துணை பொதுச்செயலாளர்
பதவியும் பறிக் கப்பட்டது.
காலம்
மாறும், சூழ்நிலை கனிந்துவரும் என்று 2 வருடங்களாக
காத்திருந்து...காத்திருந்து ஏமாந்து போனார். இந்நிலையில் அவர் இன்று
அதிமுகவின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை சந்தித்து
பேசியுள்ளார்.
இதையடுத்து அவர் அதிமுகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக