திங்கள், 24 ஜூன், 2013

சீனிவாசன் மீண்டும் தலைவர் : 12வது முறையாக தேர்வு ! கிரிகெட் மாபியாக்களை யாராலும் அசைச்சுக்க முடியாது

தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 12வது முறையாக
சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். பிரிமியர் கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையை அடுத்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் ஒதுங்கி உள்ளார். தற்காலிக தலைவராக டால்மியா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழக கிரிக்கெட் சங்கத்தின்(டி.என்.சி.ஏ.,) 83வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில், டி.என்.சி.ஏ., தலைவராக தொடர்ந்து 12வது முறையாக சீனிவாசன்(2013-14) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதன்(7வது முறை), பொருளாளராக நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டனர். இதை தவிர, 2013-14 ஆண்டுக்கான டி.என்.சி.ஏ., நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: