சனி, 29 ஜூன், 2013

சூரியநெல்லி பாலியல் வழக்கில் இருந்து குரியன் விடுவிப்பு

சூரியநெல்லி பாலியல் வழக்கில் இருந்து குரியன் விடுவிப்பு"
இந்த குற்றத்தில் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு உள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. மேலும் அந்த பெண்ணை தான் குரியனிடம் அழைத்துச் சென்றதாக முக்கிய குற்றவாளியான தர்மராஜன் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. குரியன் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் புதிதாக எந்த உண்மைகளும் இல்லை என்று கூறி, குரியனுக்கு எதிரான மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.

கருத்துகள் இல்லை: