சென்னை,: சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு முழு
நேர போலீஸ் பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தனக்கு பல்வேறு தரப்பிலிருந்து அச்சுறுத்தலும், மிரட்டலும் வருகிறது. எனவே, முழு நேர போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’ என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:மனுதாரர் டிராபிக் ராமசாமி இந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். பொதுநலன் உள்ள அந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளையும் பெற்றுள்ளார்.
மனுதாரர் 80 வயதான சமூக சேவகர். அதிகாரிகளுக்கு எதிராகவும், வணிகர்களுக்கு எதிராகவும் அவர் வழக்குகளைத் தொடர்ந்துள்ளதால் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் வரும் என்பது இயற்கைதான். இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே, அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. எனவே, டிராபிக் ராமசாமிக்கு முழுநேர பாதுகாப்பு தரும் வகையில் துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரியை போலீஸ் டிஜிபி நியமிக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு இறுதி உத்தரவுக்கு கட்டுப்படும். வழக்கு விசாரணை ஜூலை 22ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார் dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக