திங்கள், 24 ஜூன், 2013

தேமுதிக வின் ராஜ்யசபா வேட்பாளர் இளங்கோவன் Just 2 வருடங்களில் திடீர் கோடீஸ்வரன்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இளங்கோவன் இரண்டு வருடத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்துக்கும் தொண்டர்களுக்கு இடையே சுவராக இருப்பவர் இளங்கோவன் என்ற குற்றச்சாட்டு உண்டு. தொண்டர்கள் மட்டுமல்ல கட்சி எம்.எல்.ஏக்கள் சந்திக்க வேண்டும் என்றால் கூட இவரது அனுமதி வேண்டுமாம். அந்த அளவிற்கு இவர் நந்தியாக நின்றதனால்தான் சில எம்.எல்.ஏக்கள் அதிமுக தலைமையை நாடினர். அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மாறினர். தேமுதிகவின் மாநிலப் பொருப்பாளராக இருந்த இளங்கோவன்தான் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.இளங்​கோவன் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தபோது தேர்தல் ஆணையரிடம் கொடுத்துள்ள சொத்து மதிப்புதான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அசையாத சொத்துக்கள் அசையாத சொத்துக்களாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 15.8 ஏக்கரில் தோட்டம். விழுப்புரம், ஆத்தூர், சேலத்தில் உள்ள வீடுகள் எனத் தன்னுடைய பெயரில் 1.51 கோடி. தன் மனைவி பெயரில் 10.03 லட்சம் ரூபாய் வைத்துள்ளார். அசையும் சொத்துக்கள் அசையும் சொத்துக்களாக, கேப்டன் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், ஒரு லட்சம் மதிப்புள்ள மாருதி ஜிப்சி கார், நான்கு லட்சம் மதிப்புள்ள ஸ்கார்ப்பியோ கார், 342 சவரன் தங்க நகைகள் எனத் தன்னுடைய பெயரில் 21.48 லட்சமும், மனைவி பெயரில் 8.07 லட்சமும் காட்டியிருக்கிறார். இவைகளின் மொத்த மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய். இரண்டு வருடங்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பு சேலம் மேயர் தேர்தலில் போட்டியிட்டபோது, இளங்கோவனின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் மதிப்புள்ள டாடா சுமோ கார் மட்டும்தான் என்று அவரே சொத்துக்கணக்கு தாக்கல் செய்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் நரிக்குரவர் காலனியில் வசித்தவர். டூவீலர் மெக்கானிக் ஆக இருந்தவர். விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இணைந்திருந்ததோடு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததும் அதில் சேர்ந்துகொண்டார். 2006-ம் வருஷம் ஆத்தூர் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டபோது, இவர் தனக்கு அசையும் சொத்து, அசையாச் சொத்து, வங்கி இருப்பு, வீடு, காடு, கையிருப்பு என எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். 2011-ல் சேலம் மேயர் தேர்தலில் போட்டியிட்டபோதும் இவருக்கு ஒரே ஒரு டாடா சுமோ கார் இருப்பதாகவும் அதன் மதிப்பு ஒரு லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் இந்த இரண்டு வருடங்களில் இவரது சொத்து மதிப்பு 2 கோடி ரூபாயை நெருங்கி இருக்கிறது. எங்கிருந்து வந்தன இவ்வளவு சொத்துக்கள் என்று கேட்கிறார் இளங்கோவனின் சொந்த ஊரைச் சேர்ந்​தவரும், ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வுமான மாதேஸ்வரன். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது தனிப்பட்ட விசுவாசத்தைக் காட்டி வருவதாகவும் சொல்கிறார்கள். சுந்தர்ராஜன் சொத்தாமே ''மதுரை சுந்தர்ராஜன் கட்சியில் இருந்து வெளியேறியபோது அவருடைய பெயரில் இதுவரை வாங்கி வைத்திருந்த சொத்துக்களை, இளங்கோவன் பெயரில் மாற்றியுள்ளனர் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள இளங்கோவன், இந்த சொத்துக்களுக்கு எல்லாமே என்கிட்ட கணக்கு இருக்கு. தேவைப்​பட்டால், அதைக் காட்டுவேன். என்னை ராஜ்யசபா எம்.பி. வேட்பாளராக அறிவிச்சதைத் தாங்கிக்க முடியாமல் சிலர் பொறாமையில அவதூறு பரப்புறாங்க என்று கூறியுள்ளார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: