திங்கள், 24 ஜூன், 2013

கேரள MLA கற்பழித்தார் இளம்பெண் புகார் ! தந்தையும், மகனும் என்னை நாசமாக்கி விட்டனர். வீடியோ காட்சிகள் அம்பலம்


As per the complaint filed by a 30-year-old woman, a native of Manjapra, the Aluva police have registered a case against the former minister Jose Thettayil, a Janata Dal (S) representative and his son Adarsh.  அங்கமாலி தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.யும், கடந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து மந்திரியாக இருந்தவருமான ஜோஸ் தெற்றயில், அவரது மகன் ஆதர்ஷ் ஆகியோர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி ஆலுவா போலீசில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- அங்கமாலியில் எனது தந்தை ஒரு மரஅறுவை மில் நடத்தி வருகிறார். இதனை திறந்து வைக்க அப்போது மந்திரியாக இருந்த ஜோஸ் தெற்றயில் எங்கள் ஆலைக்கு வந்தார். அதன்பிறகு அவர் எங்கள் வீட்டுக்கும் வருவார். அப்போது என்னை அவரது மகன் ஆதர்சுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக கூறினார். இதற்கு நானும் சம்மதித்தேன். அதன் பிறகு ஆதர்சு எங்கள் வீட்டிற்கு வந்தார். என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார். திருமணம் செய்யப்போகிறார் என்ற நம்பிக்கையில் நானும் அவருடன் சுற்றினேன். இதில் ஆதர்சு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு என்னை சந்திப்பதை தவிர்த்தார்.
இதுபற்றி அவரது தந்தை ஜோஸ் தெற்றயிலிடம் கூறினேன். அவர் ஆலூவாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று என்னை பலாத்காரம் செய்து விட்டார். தந்தையும், மகனும் என்னை நாசமாக்கி விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். மேலும் ஜோஸ் தெற்றயில் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் சி.டி. ஆதாரத்தையும் போலீசாரிடம் வழங்கினார். இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இதுபற்றி கேரள போலீஸ் இலாகா மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, அங்கமாலி எம்.எல்.ஏ. ஜோஸ் தெற்றயில், அவரது மகன் ஆதர்சு ஆகியோர் மீது கூறப்பட்ட புகார் பற்றி எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.பி. அஜிதாபேகம் சுல்தான் விசாரணை நடத்துவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஜோஸ் தெற்றயில் கூறும்போது, இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என்றார். ஜோஸ் தெற்றயில் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்தவர்
 .maalaimalar.com

கருத்துகள் இல்லை: