திங்கள், 24 ஜூன், 2013

நடிகை ஹேமமாலினியின் இளைய மகள் நிச்சயதார்த்தம்

பாலிவுட் நட்சத்திர தம்பதியான, தர்மேந்திரா - ஹேமமாலினியின் இளைய மகளும், பிரபல ஒடிசி நடன கலைஞருமான, அகானா தியோலின் திருமண நிச்சயதார்த்தம், மும்பையில் நேற்று நடைபெற்றது. தர்மேந்திராவும், ஹேமமாலினியும், தம்பதியருக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். தர்மேந்திரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்; ஹேம மாலினி, தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர். இந்த தம்பதியரியரின் இளைய மகள், அகானா தியோல், 27 ஒடிசி நடனக்கலைஞர். இவர் ஒரு சில திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். ஒடிசி நடனத்தில் திறமை பெற்ற அகானா, பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நடனங்களிலும், தேர்ச்சி பெற்றவர். பேஷன் டிசைனிங்கிலும், ஆர்வம் உடையவர். அகானாவுக்கும், டில்லியைச் சேர்ந்த தொழில் அதிபர், வைபவ் வோராவுக்கும், நேற்று முன்தினம் இரவு, மும்பையில் ஜூஹூ பகுதியில் உள்ள, ஹேமமாலினியின் இல்லத்தில், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், பாலிவுட் திரையுலக பிரபலங்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றனர். திருமண தேதி பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஹேமாமாலினி தர்மேந்திரா தம்பதியரின் மூத்த மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான, இஷா தியோலுக்கு கடந்தாண்டு பரத் தகாடனி என்ற தொழில் அதிபருடன், திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: