சனி, 29 ஜூன், 2013

R T I: தகவல் அறியும் சட்டத்தில் இருந்து தப்ப சகல கட்சிகளும் முயற்சி

புதுடில்லி: ஆர். டி. ஐ., எனப்படும தகவல் அறியும் சட்ட வரம்பிற்குள் அரசியல்
கட்சிகளையும் கொண்டு வருவது தொடர்பான உத்தரவு .
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட ஒரு மனுவை விசாரித்த மத்திய தகவல் உரிமை ஆணையம் , அரசியல்கட்சிகளையும் இந்த வரம்பிற்குள் கொண்டு வர முடிவு செய்து ஒரு ஆணைய பிறப்பித்தது. இதன் படி கட்சியின் வரவு செலவுகள் மற்றும் கட்சி நிதி, வேட்பாளர் தேர்வு, கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகள் குறித்து ஒரு சாமானியன் கேட்டால் தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில் இந்த ஆணை இருந்தது. இதனால் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
மத்தியில் காங்.ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை 2005-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த சட்டம் அரசு நிர்வாகத்தில் நேர்மையான , நியாயமான முறையில் நடக்கிறதா என்பதனை பொதுமக்கள் அறிய பெரிதும் உதவி புரிந்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தகவல் அறியும் உரிமை சட்டவரம்பிற்குட்பட்டவர்கள் தான் மத்திய தலைமை தகவல் கமிஷன் அதிரடியாக உத்தரவிட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவந்து திருத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.  இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் RTI யை வரவிட்டிருக்க மாட்டார்கள்... RTI சட்டம் கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி சொந்தச்செலவில் சூனியம் வைத்துக்கொண்டது போலத்தான்...


அந்த திருத்தத்தில் , அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளித்திட வகை செய்யும் வகையில் உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் இந்த முடிவிற்கு , பல்வேறு தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: