திங்கள், 24 ஜூன், 2013

அஞ்சலியின் கொந்தளிப்பு!! நடிகைகள் என்றால் அடிமைகளா?

தனது சித்தி பாரதிதேவியின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு இப்போது
ஆந்திராவில் மையம் கொண்டிருக்கிறார் அஞ்சலி. அங்கு தனது பெற்றோருடன் இருந்தபடி தாய்மொழியான தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் திடீரென்று மீண்டும் அவர் சித்தியிடன் இணைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.ஆனால், இதுபற்றி அஞ்சலியிடம் கேட்டபோது, என்னை பார்ப்பதற்காக அவராகவே ஆந்திரா வந்தார். வீடுதேடி வந்ததால் பேசினேன். மற்றபடி அவரது கட்டுப்பாட்டை விட்டு முற்றிலுமாக வெளியேறி விட்டேன். இப்போது என் சம்பந்தப்பட்ட விசயங்கள் அனைத்தையும் நானே சுதந்திரமாக முடிவெடுக்கிறேன். இது எனக்கு உற்சாகமாக உள்ளது. திரையுலகைச் சேர்ந்த நண்பர்களும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதனால், எனக்குள் இருந்த இறுக்கமான நிலை மாறி இப்போது சகஜமாகி விட்டேன். மேலும், நான் எனது சித்தியிடம் ஒரு கொத்தடிமை போன்று நடத்தப்பட்டேன். லட்சம் லட்சமாக சம்பாதித்து கொடுத்த என்னை அவர் அப்படி அடிமை போல் நடத்தியது எனக்கு பிடிக்கவிலலை. அதனால் அதற்கொரு முடிவு கட்டத்தான் அங்கிருந்து வெளியேறினேன். நான் மட்டுமல்ல யாராக இருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள் என்கிறார் அஞ்சலி.

கருத்துகள் இல்லை: