சனி, 29 ஜூன், 2013

கமலுடன் நடிக்க மறுத்த காஜல் அகர்வால் ! சம்பள விஷயத்தில் கறார்

முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க நடிகைகள் போட்டி போடுவதுண்டு.
முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது சம்பளத்தை பற்றி கதாநாயகிகள் கவலைப் படுவதில்லை. ஆனால் நடிகை காஜல் அகர்வால் இதற்கு நேர் மாறாக உள்ளார். சம்பள விஷயத்தில் மிகவும் கறாராக நடந்து கொள்கிறார். காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் கமலஹாசனுடன் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து கமலஹாசன் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்டார். கமலஹாசனுடன் நடிக்க நடிகைகள் போட்டி போடும் போது சம்பள விஷயத்தால் அந்த வாய்ப்பை காஜல் அகர்வால் இழந்துள்ளார். அதே போல் சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாணுடன் “கப்பர்சிங்-2” படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த படத்தில் இருந்தும் காஜர்அகர்வால் விலகிவிட்டார். முன்னணி நடிகர்களுடன் நடித்தால்தான் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும். அப்போது சம்பளத்தை பெரிதாக கருத வேண்டாம் என்று அவருக்கு நெருங்கிய தோழிகள் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் காஜல்அகர்வால் அதை கண்டு கொள்ளவில்லை.

கருத்துகள் இல்லை: