S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
சங்கரன் கோவில் வெற்றி என்பது காசு கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி, அதுபோல் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாமென பாட்டியம்மா நினைத்து தனியாக நின்றால் மக்கள் ஊ .... ஊ ... என சங்கு ஊதிவிடுவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய ஆட்சியில், தி.மு.க., அங்கம் வகித்து வருகிறது. இந்த இடத்தில், அ.தி.மு.க., முன்பு இருந்தது. தி.மு.க.,வை வெளியேற்றி, மீண்டும் அந்த இடத்துக்குப் போவதே, முதல்வர் ஜெயலலிதாவின் அடுத்த இலக்காக உள்ளது.ஓட்டு வங்கி அதிகரிப்பு:இதற்காக, இப்போதிருந்தே திட்டங்களை வகித்து வருகிறார். சட்டசபை தேர்தலில், கூட்டணியாக இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க., போன்ற பெரிய கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறிய பின், அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில் எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை. மாறாக, ஓட்டு வங்கி அதிகரித்தே உள்ளது.
குறிப்பாக, நகரம் மற்றும் கிராமப் புறங்களில், அ.தி.மு.க.,வுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதாகவே இருக்கிறது.மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால், மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றி வரும் திட்டங்கள், மக்கள் மத்தியில் அ.தி.மு.க.,வின் செல்வாக்கை உயர்த்துவதாக உள்ளன. பால் விலை உயர்வு, பஸ் கட்டண அதிகரிப்பு ஆகியன ஆளும் கட்சிக்கு, மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தும் என, எதிர்க்கட்சிகள் போட்ட கணக்கு தப்பாகி உள்ளது.""அரசின் பொதுத் துறை நிறுவனங்களான ஆவின், போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் நிலவும் நிதி நெருக்கடியைப் போக்க, கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது'' என, முதல்வர் ஜெயலலிதா மக்கள் முன் வைத்த விளக்கத்தை, மக்கள் ஏற்றுக்கொண்டே உள்ளனர். இதன் எதிரொலியே, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அக்கட்சிக்கு கிடைத்த அமோக வெற்றியாக உள்ளது என, அரசியல் கருத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊக்கம் அளித்த ஐந்து மாநில தேர்தல்:உ.பி., பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு, அண்மையில் முடிந்த சட்டசபை தேர்தலில், மாநில கட்சிகளே அபரிவிதமான வெற்றியை பெற்றுள்ளன. அதிலும், குறிப்பாக காங்கிரஸ் எதிர்ப்பு என்பது மிகப் பெரிய அளவில் வெளிப்பட்டுள்ளது. இதன் முடிவுகள், வரவுள்ள லோக்சபா தேர்தலிலும் வெளிப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம், தமிழகத்திலும் எதிரொலிக்க உள்ளது. காங்கிரசுக்கு எதிரணியில் உள்ள அ.தி.மு.க.,வுக்கு இது ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது. அதனால், லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து அடுத்த காய்களை, அ.தி.மு.க., பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க.,வுக்கு எதிராக உள்ள தி.மு.க.,- ம.தி.மு.க.,- பா.ம.க.- தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியன சிதறியே இருக்கின்றன. இவை, அ.தி.மு.க.,வுக்கு வலுவான எதிர்ப்பை ஒருங்கிணைந்து அளிப்பதில், தோல்வியே கண்டு வருகின்றன. இந்த சூழல், தனித்து நிற்கும் அ.தி.மு.க.,வுக்கும் கூடுதல் பலத்தை அளிப்பதாகவே இருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசால் பெரிய எதிர்ப்பை, அ.தி.மு.க.,வுக்கு ஏற்படுத்த இயலாது. மேலும், மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், அக்கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அது, அ.தி.மு.க.,வுக்கும் சாதகமாகவே இருக்கும் என, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். லோக்சபா தேர்தல் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இந்த இடைவெளியில் மக்கள் செல்வாக்கை மேலும் உயர்த்திக் கொள்ள புதிய திட்டங்கள், மக்கள் நல்வாழ்வு அம்சங்களை முழுவீச்சில் செயல்படுத்த, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு வருகிறார். அதன் ஒரு அம்சமே, விஷன் 2013 என்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக