வியாழன், 29 மார்ச், 2012

நடிகர் சங்கத்தில் 30 கோடி ரூபாய் அளவுக்கு பேரம்

சரத்குமாரின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவரது ஃபோன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது.டிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது? என்கிற ஆவேச கேள்வி, ஸ்டார் நடிகர்களிலிருந்து சாதாரண நடிகர்கள் வரை சத்தமில்லாமல் எதிரொலிப்பதுதான் கோடம் பாக்கத்தின் ஹாட் டாபிக்.

தென்னிந்திய நடிகர்-நடிகையர்களின் நலன்களுக்காக 1952-ல் உருவானது தென்னிந்திய நடிகர் சங்கம். தங்களுக்கென ஒரு சங்கம் வேண்டுமென தீவிர முயற்சி எடுத்த எம்.ஜி.ஆரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சென்னை அபிபுல்லா சாலையில் ஒரு ஏக்கர் ( 18 கிரவுண்ட்) நிலத்தை வாங்கினர்.
அந்த இடத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவாஜி, வங்கி மூலம் கடன் பெற்று சங்கத்திற்காக பிரம்மாண்டமான கட்டி டத்தை கட்டினார். சங்கத்தின் வளாகத்திலேயே மீட்டிங் ஹால், டப்பிங் தியேட்டர் உள்ளிட்டவை களையும் உருவாக்கினார் சிவாஜி. அவரின் அய ராத உழைப்பினால் உருவானதுதான் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான கட்டிடம்.பல்வேறு திறமைகளால் உலக அளவில் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த மூத்த நடிகர்களின் வியர்வையில் உதித்த அந்த கட்டிட நிலம், தற் போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒரு வருக்கு கமர்ஷியலுக்காக தாரை வார்க்கப்பட்டுவிட் டது. இதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு தரை மட்ட மாக்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்னெஸ் டீலிங்கில் நடந்துள்ள மறைமுக ஊழல்கள்தான்... ஸ்டார் நடி கர்கள் முதல் சாதாரண நடிகர்கள் வரை மௌன மாக கொந்தளிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

நடிகர் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் உள்ள நேர்மையான உறுப்பினர் கள் சிலரிடம் பேசியபோது, ""நடிகர் சங்க கட்டி டத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் 7 மாடி கள் கொண்ட ஷாப்பிங் மால் கட்டிக்கொள்ள ஆந்திராவைச் சேர்ந்த "எஸ்.பி.ஐ. சினிமாஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு 29 வருடம் 11 மாதத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளனர் சங்கத்தின் தலைவர் சரத் குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரும். இதற்காக, அந்த நிறுவனத்தின் சொரூப் ரெட்டியிடம் சரத்குமாரும் ராதாரவியும் லீஸ் (குத்தகை) அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டனர். சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த அக்ரிமெண்ட்டும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு செயற்குழுவின் அனுமதியைப் பெறாமலே, நவம்பர் 25, 2010-ல் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கான அக்ரிமெண்ட் பதிவு செய் துள்ளனர். அதன் பிறகு, நவம்பர் 30, 2010-ல் சங்கத்தின் செயற்குழுவையும், பிப்ரவரி 2, 2011-ல் பொதுக்குழுவையும் கூட்டி ஷாப்பிங் மால் கட்ட குத்தகைக்கு விடுவதற்கான ஒப்புதலை பெறுகிறார் கள். பொதுக்குழுவி லும், செயற்குழுவி லும் விவாதித்து அதன் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் அக்ரிமெண்ட் நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இங்கு சங்கத்தின் சொத்தை தாரைவார்த்து விட்டு பிறகு ஒப்புதலை பெறுகிறார்கள். இதை செய்யவேண்டிய அவசியம் என்ன?


அதுவுமில்லாமல் பொதுக்குழு, செயற்குழுவில் விரிவாக இதுபற்றி சொல்லி விவாதம் நடத்தாமல் மேம்போக்காக சொல்லிவிட்டு... பொதுக்குழு -செயற்குழு வின் முடிவுகளை எழுத்தில் பதிவு செய்யும் ரெக்கார்டுகளில் மட்டும் விரிவாக விவாதித்ததுபோல தங்களுக்கு சாதக மாக எழுதிக்கொண்டு ஒப்புதலை பெற்றதாக பதிவு செய்துகொண்டனர்.



சங்கத்தின் பொதுக்குழுவில் சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களிலிருந்து நலிந்த நடிகர்-நடிகையர் வரை இதில் அடக்கம். ஆனால் பெரும்பாலும் பொதுக்குழு கூட்டங்களுக்கு ஸ்டார் நடிகர்கள் வருவதில்லை.


செயற்குழுவிலும் அதேபோலத்தான். இதிலுள்ள 37 உறுப்பினர் களில் சத்யராஜ், எஸ்.வீ.சேகர் தவிர பிரபல நடிகர்கள் யாரும் இல்லை. இதில், தமிழுணர்வு சம்பந்தப்பட்ட பொருள் குறித்து விவா திக்கப்படுகிற கூட்டத்திற்கு மட்டும் தலைகாட்டுவார் சத்யராஜ். மற்ற கூட்டங் களை தள்ளிவைத்து விடுவார். அந்த வகை யில் தவறுகளை சுட்டிக் காட்டி கேள்வி கேட் பது எஸ்.வீ.சேகர், குமரிமுத்து, பூச்சிமுருகன் மூவரும்தான். ஆனால் இவர்களை சத்தம் போட்டு பேச விடாமல் செய்துவிடுவர். இப்படிப் பட்ட பொதுக்குழுவையும் செயற் குழுவையும் வைத்துத்தான், சரத் குமாரும் ராதாரவியும் நடிகர் சங்கத்தின் சொத்தை தங்கள் சொந்த சொத்து போல தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். இப்படி தாரை வார்க்கப்பட்டதன் பின்னணியில் நிறைய மர்மங்கள் இருக்கிறது. விரைவில் இது வெடிக்கும்''’என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.


இது குறித்து எஸ்.வீ.சேகரிடம் கேட்டபோது, ""நடிகர் சங்கத்துக்கு வருவாயைப் பெருக்க சங்க நிலத்தை குத்தகைக்கு விடுவதாக சொன் னாங்க. இதுக்காக சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு 8 தியேட் டர்களுடன் பல மாடி கொண்ட ஷாப்பிங் மால் கட்டப்போறாங் கன்னும் சொன்னாங்க. நடிகர் சங்கத்துக்கான கட்டிடத்தை ஒவ்வொரு செங்கல் செங்கலாகப் பார்த்து பார்த்து கட்டியவர் சிவாஜி. சூட்டிங் இல்லாத நேரம் போக மற்ற நேரம் முழுக்க இந்த கட்டிடத்திற்காக இரவு-பகல் பாராமல் தன்னோட வியர்வையைச் சிந்தியவர் அவர். அப்படி உருவான பழம்பெருமை கொண்ட சங்க கட்டிடத்தை இடிப்பதோ, அந்த நிலத்தை லீஸுக்கு விடுவதோ தேவையில்லைன்னு சொன்னேன். அதை ஏற்க மறுத்தனர். இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்குன்னு நினைச்சு அதன் பிறகு செயற்குழு கூட்டங்களுக்குப் போவதையே தவிர்த்து வருகிறேன்''’என்கிறார் சேகர்.


விவரம் அறிந்த வட்டாரங் களில் மேலும் விசாரித்தபோது, ""18 கிரவுண்டும் (ஒரு ஏக்கர்) 1720 சதுர அடியும் கொண்டது நடிகர் சங்கத்தின் சொத்து. இன்றைய மதிப்பில் இந்தச் சொத்து சுமார் 180 கோடி ரூபாய். இந்த சொத்தை 29 வருடம், 11 மாதத்திற்கு குத்தகையாக தாரை வார்த்துள்ளனர். குத்தகை வருடம் முடியும்போது இந்த 1 கோடியே 44 லட்சத்தை நடிகர் சங்கம் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துக்கு திருப்பித் தந்துவிட வேண்டும். 180 கோடி ரூபாய் சொத்தை வெறும் 1 கோடியே 44 லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.


இதில் நடிகர் சங்கத்துக்கு என்ன வருவாய்? மாத வாடகை தான் வருமானம். சரி... வாடகை எவ்வளவு? ஷாப்பிங் மால் கட்டி வர்த்தகம் துவங்கியதும் பில்டிங் கட்ட வங்கியில் வாங்கப்பட்ட கடனை அடைத்த பிறகு, முதல் மூன்று வருடத்திற்கு மாதம் 24 லட்சம். அடுத்த 3 வருடத்திற்கு மாத வாடகையில் 12 சதவீதம் அதிகரிக் கிறது. அதன்படி அப்போது மாத வாடகை 26 லட்சத்து 88 ஆயிரம். அடுத்த 3 வருடத்திற்கு அதே 12 சத வீதம் கூடுதல் வாடகை. இப்படியே போய் அக்ரிமெண்ட் முடியும் கடைசி 3 வருடங்களில் மாத வாடகை 59 லட்சத்து 42 ஆயிரத்து 250 ரூபாய். இதுதான் நடிகர் சங்கத்தின் நிலம் தாரை வார்க்கப் பட்டதன் மூலம் கிடைக்கும் வருவாய்.



நடிகர் சங்கத்தின் சொத்தை அப்படியே ஒருவருக்கு தந்துவிட முடியாது. அதனால் நடிகர் சங்கத்தின் சொத்தை, சங்கத்தின் அறக்கட்டளைக்கு மாற்ற முடிவெடுக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை விதிப்படி 9 நிரந்தர உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்த 9 உறுப்பினர்களில் நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மூவரும் அடங்குவர். நடிகர் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியால் பரிந்துரைக்கப்படும் 6 பேர் மற்ற நிரந்தர உறுப்பினர்கள். ஆனால் கடந்த 10 வருட காலமாகவே நடி கர் சங்கத்தின் தலைவர் சரத்குமாரும் பொதுச்செயலாளர் ராதாரவி யும் மட்டுமே அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மற்ற உறுப்பினர்களை நியமிக்க இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுந்ததன் அடிப்படையில் பொருளாளர் வாகை சந்திரசேகர் அறக்கட்டளை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.


இந்த சூழலில், நடிகர் சங்க சொத்தை தாரைவார்க்க இருவரும் தன்னிச்சையாக முடிவெடுத்ததால் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி, அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்ட்டி சரத்குமாருக்கு நடிகர் சங்க சொத்தை 99 வருடத்திற்கு லீசுக்குத் தருவதாக எழுதிக் கொடுக்கிறார். இதுவும் பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படை யில் நடிகர் சங்கத்திற்கான சொத்து அறக்கட்டளைக்குச் சொந்தமாகி விடுகிறது. இப்படி தனியாருக்கு தாரை வார்ப்பதற்காகவே அனைத்து பரிவர்த்தனைகளையும் மாமா, மச்சான் என்று பேசிக்கொள்ளும் சரத்தும் ராதாரவியுமே முடிவெடுத்து டீலிங்கை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது ஒரே ஒரு ஸ்டார் நைட் நடத்தி, சங்கத்தின் கடனை முழுவதுமாக அடைத்ததும் அல்லாமல், நடிகர் சங்கத்தின் அக்கவுண்ட்டில் 1 கோடி ரூபாயும், அறக்கட்டளையில் 2 கோடி ரூபாயும் வைத்து விட்டுப் போனார். நடிகர் சங்கத்துக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காகத்தான் நிலம் குத்தகைக்கு விடப்படுகிறது என்பது உண்மையான காரணம் என்றால் சரத்தும் ராதாரவியும் சேர்ந்து வருடத்திற்கு இரண்டு ஸ்டார் நைட் புரோக்ராம் நடத்தினாலேயே சங்கத்திற்கும் அறக்கட்டளைக்கும் பல கோடி ரூபாய் வருமானத் தைச் சேர்க்கலாம். இதைச் செய்யாமல் வருமானத்திற்காக ஆந்திர தொழிலதிபருக்கு ஏன் நடிகர் சங்க சொத்தை தாரைவார்க்க வேண்டும்? சரி, தனியாருக்குக் கொடுக்கலாம் என முடிவெடுக்கும் போதும், அக்ரிமெண்ட் கையெழுத்தாகும்போதும் பொதுக்குழு, செயற்குழுவில் உள்ள மூத்த நடிகர்களை வைத்துக்கொண்டு செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை? அக்ரிமெண்ட்டில் சாட்சியாக கையெழுத்துப் போட்டிருப்பவர் சங்கத்தின் மேனேஜராக இருக்கும் நடேசன். பல மூத்த நடிகர்கள் இருக்கும்போது சாதாரண மேனேஜர் ஒருவரை ஏன் அழைத்துச் செல்லவேண்டும்?


ஒருமுறை செயற்குழுவில் பூச்சி முருகன் போன்றவர்கள், "நிலம் தாரைவார்க்கப்பட்டிருப்பதில் பல சந்தேகங்கள் இருக்கு. அதனால் மூத்த நடிகர்கள் சோ, சிவகுமார், ராஜேஷ், விசு போன்றவர்களை கொண்ட ஒரு கமிட்டியை ஏற்படுத்தி இதனை ஆய்வு செய்யலாம்' என்று சொல்லியபோது, "அதெல்லாம் தேவையில்லை' என மறுத்துவிட்டனர் சரத்தும் ராதாரவியும். மூத்த நடிகர்கள் சங்கத்தைப் பற்றி கவலைப் படாததும், கேள்விகள் எதுவும் கேட்காததும்தான் சங்கத்தில் தவறுகள் நடக்க காரணமாக இருக்கிறது. அக்ரிமெண்ட்டின்படி சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. சங்கத்தின் பொரு ளாளராக இருக்கும் தி.மு.க. வைச் சேர்ந்த வாகை சந்திர சேகரும் நடந்துள்ள தவறு களுக்கு உடந்தையாக இருக்கிறாரோ? என்றும் பலருக்கு சந்தேகம். இப்போது நடிகர் சங்கம் வெளியே வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது. இது தவிர, தற்போதைய நடிகர் சங்கத்திற்கு எதிரே ஒரு பிளாட்டும் வாங்கப்பட்டிருக் கிறது. இது யார் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது என் பதும் மர்மமாகவே இருக் கிறது'' என்றும் சுட்டிக்காட்டு கிறார்கள்.


லீஸ் விவகாரத்தில் 30 கோடி ரூபாய் அளவுக்கு பேரம் நடந்திருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டும் விவரமறிந்த வட்டாரங் களில் எதிரொலிக்கிறது. ஆளுங்கட்சியில் ராதாரவியும், ஆளுங்கட்சி கூட்டணியில் சரத்தும் இருப்பதால் வெளிப்படையாகப் பேசுவதற்கு பலரும் தயங்குகிறார்கள்.


இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, ""நடிகர் சங்கத்தில் 2500-க்கும் மேற்பட்ட நலிந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குடும்ப நலன்களுக்காக பல உதவிகளை செய்துகொண்டிருக்கிறது நடிகர் சங்கம். அந்த நலிந்த கலைஞர்களின் வாழ்வை மேம்படுத்த நடிகர் சங்கத்திற்கு நிதி ஆதாரம் நிறைய தேவைப்படுகிறது. அதற்காகத்தான் நடிகர் சங்க இடத்தை கமர்ஷியல் பிசினஸுக்காக குத்தகைக்கு விட முடிவெடுக்கப்பட்டது. அப்படி முடிவெடுக்கப்பட்டதில் எந்தவித முறைகேடுகளோ, ஊழல்களோ நடக்கவில்லை. விதிமுறைகளின்படி பொதுக்குழு, செயற்குழுவின் அனுமதி பெற்றே எல்லாம் நடந்திருக்கிறது. எத்தனையோ குற்றச்சாட்டுகள் என்னை நோக்கி வந்திருக்கின்றன.


அந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பிறகு உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோலதான் இப்போது கூறப்படும் குற்றச்சாட்டுகளும். இந்தக் குற்றச்சாட்டுகளும் தவறானது என்பது நிரூபணமாகும். சிலரின் சுய லாபங்களுக்காக இது பெரிதுபடுத்தப்படுகிறது. மற்றபடி, இந்த நில விவகாரத்தில் மர்மங்களோ, ஊழல்களோ சிறிதும் நடக்கவில்லை. அப்படி நடந்திருப்பதாக யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்'' என் றார் ஒரே போடாக.


இது குறித்து சரத்குமாரின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவரது ஃபோன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யப் பட்டிருந்தது. சரத்குமார் விளக்கம் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம். பிரபல தமிழக நடிகர்களின் ரத்தத்தால் உருவான சங்க கட்டிடத்தில் சர்ச்சைகளும், ஊழல்களும் வரக்கூடாதல்லவா?


-ஆர். இளையசெல்வன்

படங்கள் : சுந்தர் & அசோக்

thanks nakkeeran + sundar salem

கருத்துகள் இல்லை: