சென்னை, மார்ச் 25-ஆவடியை சேர்ந்தவர் சாய்ராம். மத்திய அரசு ஊழியர்.இவரது மனைவிகிருஷ்ண வேணி, 2 குழந்தைகள் பிறந்த பிறகு, கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து, சாய் ராம் அதே பகுதியை சேர்ந்த மீராவை இரண் டாவதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. பின்னர் சாய்ராம் மரண மடைந்தார்.மீரா பெயரை வாரிசு என்று சாய்ராம் குறிப்பிட்டி ருப்பதால், கிருஷ்ண வேணிக்கு ஓய்வூதியப் பலன்களை தர முடி யாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. இதை எதிர்த்து, கிருஷ்ண வேணி சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சாய் ராமின் ஓய்வூதியப் பலன்களைபெற கிருஷ்ணவேணிக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட் டது. இதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, விமலா அடங் கிய அமர்வு அளித்த தீர்ப்பு: முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது 2ஆவது திரு மணம் செய்வது இந்து திருமணச் சட்டத்தின் படி சட்டபூர்வமாகாது. எனவே, முதல் மனைவி கிருஷ்ணவேணிதான் சாய்ராமின் சட்ட பூர்வமான வாரிசு. அவ ருக்கும் அவரது 2 குழந் தைகளுக்கும் சாய்ரா மின் ஓய்வூதியப் பலன் களைப் பெற உரிமை உள்ளது. மீரா சட்ட பூர்வமான வாரிசு இல்லாவிட்டாலும், அவரது குழந்தைகள் சாய்ராமின் சட்டபூர்வ வாரிசாகிறார்கள்.
எனவே, சாய்ராமின் ஓய்வூதியப் பலன்களை கிருஷ்ணவேணிக்கு வாழ்நாள் முழுவதும் தரவேண்டும். அவரது குழந்தைகளுக்கும் மீராவின் குழந்தை களுக்கும் உரிய விகி தாச்சாரத்தின்படி மத்திய அரசு பிரித்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக