புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக ஏப்ரல் 9ம் தேதி ஜெயேந்திரர் நேரில் ஆஜராக வேண்டும் என புதுவை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே ஜெயேந்திரர், புதுவை தலைமை நீதிபதி ராமசாமி ஆகியோர் போனில் உரையாடியதாக செய்தி வெளியானது. இதையடுத்து சவுந்தரராஜன் என்பவர், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதற்கிடையே தலைமை நீதிபதி ராமசாமி, பெரம்பலூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதுவை தலைமை நீதிபதியாக முருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் சுந்தரேச அய்யர், ரகு உள்பட 5 பேர் ஆஜரானார்கள். வரும் ஏப்ரல் 9ம் தேதி, ஜெயேந்திரர், விஜேயந்திரர் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் நேரில் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக