திங்கள், 26 மார்ச், 2012

எந்தெந்த நடிகைகளோடு தொடர்பு இருந்தது?ராவணனின் மன நிலை

காண்ட்ராக்டரை மிரட்டி பணம் பறித்துக்கொண்டதாக ஜனவரி 27-ந் தேதி கைது செய்யப்பட்ட ராவணன் மீது, மேலும் பல மோசடி வழக்குகள் பதியப்பட்டு அவர், இன்றுவரை நீதிமன்றம், போலீஸ் கஸ்டடி, சிறைவாசம் என தொடர்ந்து அனுபவித் துக்கொண்டிருக்கிறார். ‘
ஆடிய ஆட்டத் துக்கான வெகுமதி செமையாகக் கிடைத்திருக்கிறது‘ என ர.ர.க்களில் பெரும்பான்மையானோர் உற்சாகத்தில் திளைத்துவரும் நிலையில்... தற்போது சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கும் ராவணனின் மன நிலை என்ன? கைதுக்குப் பின் அவர் சந்தித்த அனுபவங்கள்தான் என்ன? என அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க. பிரமுகர்கள் தரப்பிலேயே விசாரித்தோம்.

""எங்கள் பெயரையோ படத்தையோ வெளியிட்டுவிடாதீர்கள்'' என்ற வேண்டுகோளோடு மனம் திறந்தார்கள்.

"""என்னால் சிபாரிசு செய்யப்பட்டு சீட் வாங்கி ஜெயித்த எம்.எல்.ஏ.க்களே 65 பேர் இருக்காங்க. இதில் பலருக்கு மந்திரி அந்தஸ்த்தும் கிடைத்திருக்கிறது' என அடிக்கடி காலரை தூக்கிவிட்டுக் கொண்டிருந்த ராவணன், கார்டனுக்கு துரோகம் இழைக்கும் வகையில் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார். பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு, "ஜெ.’வுக்கு அடுத்த தாக முதல்வர் நாற்காலியில் யாரை உட்காரவைக்கலாம்' என நடராஜன், சசிகலா, திவாகரன் ஆகியோர் நடத்திய சீக்ரெட் டிஸ்கஷன்களில் ராவணனும் கலந்துகொண்டதுதான் அந்த தவறு. "உங்களையெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சம்பாதிக்கவிட்டதுக்கு நீங்கள் காட்டும் நன்றி விசுவாசம் இதுதானா?' என்கிற கோபத்துக்கு ஆளானதால்தான் ராவணன் உள்ளிட்ட எல்லோரும் இப்போது திண்டாடிக்கொண்டிருக் கிறார்கள்.

தன்னால் பதவி பெற்ற பலரும் பதவி, பவிசு, ஆடம்பர வாழ்க்கை என சைரன்கார்களில் போய்க்கொண்டிருக்கும் போது தான்மட்டும் சிறைக்கொட்டடியின் சிமெண்ட் தரையில், கொசுக்கடிகளோடு புழுங்கித் தவிக்க வேண்டியிருக்கிறதே என இப்போது ராவணன் மனம் நொந்து போயி ருக்கிறார். மந்திரிகள் தொடங்கி பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகள்வரை தனக்கு பவ்வியமாக சல்யூட் அடித்த நிலைமாறி, இன்று கஸ்டடி விசாரணை களில் கடுமையான அடிஉதையும் கெட்ட வார்த்தைகளின் அர்ச்சனையும் கிடைத்ததை எல்லாம் நினைத்து நினைத்து தனியாய் அழுகிறார். அதுமட்டுமல்லாது ராவணனை என்கவுன்டர் செய்யும் முடிவும் எடுக்கப் பட்டு, பின்னர் அது கைவிடப்பட்டிருக்கிறது. இதையறிந்ததிலிருந்து உயிர்பயத்திலேயே இருந்தார். ராவணனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கூட மோசடி வழக்குகள் பற்றி ஒரு கேள்வியைக் கூட விசாரணை அதிகாரிகள் கேட்கவில்லை. "உனக்குத் தெரிந்த பெண்களில் யார் யாருக்கு மக ளிரணியில் பதவி போட்டுக் கொடுத்தாய்? எந்தெந்த நடிகைகளோடு உனக்கு தொடர்பு இருந்தது? எந்தெந்த விடுதிகளிலும் யார் யாரின் தோட்டங்களிலும் யார் யாரோடு தங்கியிருந்தாய்?' என்ற ரீதியிலேயே ஆபாசம் தொனிக்கும் கேள்விகளைக் கேட்டு உளவியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்திருக்கிறார்கள். இதனால் ரொம்பவே நொந்து போயிருந்த ராவணன், சமீப நாட்களாய் தனக்கு விரைவில் மன் னிப்பு கிடைத்து விடும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். "என்னிடமிருந்த எல்லா வகையான சொத்து பற்றிய டாகுமெண்ட்டுகளும் கைப் பற்றப்பட்டுவிட்டன. முன்னூறு பெரிய எழுத்துத் தொகை அளவிற்கு எல்லா வற்றையும் கொண்டுபோயாகிவிட்டது. இனி என்னிடம் எடுத்துக்கொள்ள எதுவும் இல்லை. அதனால் விரைவில் என்னை வெளியே அனுப்பிவிடுவார்கள். அடுத்த கொஞ்ச நாளிலேயே என்னை மன்னித்து தன்னோடு அழைத்துக்கொள்வார்கள்' என்றெல்லாம் நெருக்கமானவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ராவ ணன்''’என்கிறார்கள் விரிவாகவே.

-ஜீவா
படம் : ஸ்டாலின்
thanka nakkeeran +natraj chennai

கருத்துகள் இல்லை: