ஞாயிறு, 25 மார்ச், 2012

சசிகலா அண்ணன் மகன் மகாதேவனை தேடும் ADMK போலீசார்

நில அபகரிப்பு வழக்கில், சசிகலா அண்ணன் மகன் மகாதேவனை கைது செய்ய, 100க்கும் மேற்பட்ட போலீசார், அவரது வீட்டுக்கு சென்றனர். மகாதேவன் தலைமறைவாகி விட்டதால், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
துபாயில் வசித்து வரும் அமலா புஷ்பமேரி என்பவருக்கு, தஞ்சாவூர் அடுத்த விளார் கிராமத்தில், இரண்டு கிரவுன்ட் நிலம் உள்ளது. இதை, சசிகலாவின் அண்ணன் டாக்டர் வினோதகனின் மகன் மகாதேவன் அபகரித்துக் கொண்டதாக, தஞ்சாவூர் நில அபகரிப்பு மீட்பு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, தஞ்சை டவுன் போலீஸ் டி.எஸ்.பி., ஜோஸ் தங்கையா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், மகாதேவனை கைது செய்ய , தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர். எனினும், வீட்டிலிருந்து மகாதேவன் தலைமறைவாகிவிட்டார். வீட்டில் சோதனை நடத்தியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து, போலீசார் மகாதேவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.
தஞ்சை தமிழ் நகரில் உள்ள இடம் தொடர்பாக சகுந்தலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், நடராஜன் மற்றும் நட்சத்திர நகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரிலும் மகாதேவன் பெயர் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: